Top posting users this month
No user |
திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
Page 1 of 1

திருமலை, டிச.20–
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜனவரி முதல் தேதி வைகுண்ட ஏகாதசி தினமாகவும் அமைந்துள்ளதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். எனவே அன்றைய தினம் திருமலைக்கு வரும் பக்தர்களில் நடந்து மலை ஏறும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ரூ.300 தரிசனம், மூத்த குடிமக்கள், ராணுவத்தினர், 1 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ஆகியவை உட்பட எவ்வித தரிசனத்திற்கும் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.
அன்று அதிகாலை 1.45 முதல் காலை 5 மணி வரை வி.ஐ.பி பக்தர்கள் தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் வழங்கப்படும். வி.ஐ.பிக்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும்.
வி.ஐ.பி பக்தர்கள் வேறு யாருக்காவது டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வி.ஐ.பி தரிசன டிக்கெட்டின் விலை தலா ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு தொடங்கி அன்று இரவு 1.30 மணி வரை சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம். அன்று முழுவதும் இலவச தரிசனத்திற்காக மட்டும் ஒரே ஒரு வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
மறுநாள் 2ம் தேதி துவாதசி அன்று காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன் பதிவு செய்து ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இதற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை இம்மாதம் 24ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும்.
திருமலையில் உள்ள சாலைகளில் அவ்வப்போது ஏற்படும் பாறை சரிவுகளுக்கு முடிவு கட்ட சென்னை ஐ.ஐ.டி நிபுணர்களின் ஆலோசனையை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் உட்புறம், வெளிப்புறங்களில் முழு அளவில் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். தவறினால் அவர்களுடைய கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum