Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அனைத்திற்கும் பின்னணியில் ஐ.தே.க: சாடும் நிமல்

Go down

அனைத்திற்கும் பின்னணியில் ஐ.தே.க: சாடும் நிமல் Empty அனைத்திற்கும் பின்னணியில் ஐ.தே.க: சாடும் நிமல்

Post by oviya Wed May 13, 2015 12:41 pm

குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் அவர்களை பொது சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்து பிணை வழங்க முடியாதவாறு விளக்கமறியலில் வைப்பதனை அனுமதிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பயமுறுத்தும் வகையில் இவ்வாறு அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு பின்னணியில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சி என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், 20ஆம் திருத்தச்சட்டத்தை சமர்ப்பித்து தேர்தல் ஒன்றிற்கு செல்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையின் கீழ் இடம்பெறும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தற்போதைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி அவ்வாறான ஒரு இணக்கத்தை தெரிவிக்கவில்லை என எதிர்க் கட்சி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum