Top posting users this month
No user |
Similar topics
மசாலா கறி
Page 1 of 1
மசாலா கறி
பீன்ஸ் - 4
உருளைக்கிழங்கு - ஒன்று
பீட்ரூட் - 50 கிராம்
காரட் - 2
பச்சை வேர்க்கடலை - 50 கிராம்
பச்சை பட்டாணி - 50 கிராம்
தனியா - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
சின்ன வெங்காயம் - 6
பெரிய வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கவும். பீன்ஸ், காரட், பீட்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதைப் போல பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
அரைக்க தேவையான இதர பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின உருளைக்கிழங்கு, பீன்ஸ், காரட், பீட்ரூட், வேர்க்கடலை, பச்சை பட்டாணி போட்டு காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூடி வெய்ட் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், தனியா, சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகளை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.
அதன் பிறகு அதனுடன் அரைத்த விழுதை போட்டு ஒன்றாக பிரட்டி விட்டு அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் கிளறி இறக்கவும்.
எல்லா காய்கறிகளும் நிறைந்த மசாலா கறி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum