Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்து மத யுக கணக்குகள்

2 posters

Go down

இந்து மத யுக கணக்குகள்  Empty இந்து மத யுக கணக்குகள்

Post by ram1994 Mon Dec 22, 2014 2:40 pm

இந்து மதப்படி 4 யுகங்கள் உள்ளன .அவை பின்வருமாறு

1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)

2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)

3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)

4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)

இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.

71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.

14 மனு கொண்டது ஒரு கற்பம்.

ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.


இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.


8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்

பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)

விஷ்ணு - 5,84,000 யுகங்கள்

உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் அவை மீண்டும் மறு சுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம், பொற்காலம், கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.
ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும்? என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்கு தனது முந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டி விடுகிறதாம்.
இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்துக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். மனிதனாகப் பிறந்தால் மட்டும்

முப்பது கற்ப காலங்கள் :-

1.வாமதேவ கற்பம்

2.சுவதேவராக கற்பம்

3.நீல லோகித கற்பம்

4.ரந்தர கற்பம்

5.ரௌரவ கற்பம்

6.தேவ கற்பம்

7.விரக கிருஷ்ண கற்பம்

8.கந்தற்ப கற்பம்

9.சத்திய கற்பம்

10.ஈசான கற்பம்

11.தமம் கற்பம்

12.சாரஸ்வத கற்பம்

13.உதான கற்பம்

14.காருட கற்பம்

15.கௌரம கற்பம்

16 நரசிம்ம கற்பம்

17 சமான கற்பம்

18 ஆக்நேய கற்பம்

19 சோம கற்பம்

20. மானவ கற்பம்

21.தத்புருஷ கற்பம்

22. வைகுண்ட கற்பம்

23. லெச்சுமி கற்பம்

24. சாவித்திரி கற்பம்

25. கோரம் கற்பம்

26. வராக கற்பம்

27. வைராஜ கற்பம்

28. கௌரி கற்பம்

29. மகோத்வர கற்பம்

30 பிதிர் கற்பம்

ஒரு நாழிகை -24 நிமிடம்
21/2 நாழிகை   -1 மணி
60 நாழிகை      - 1 நாள்
360 நாள்             -1 சாந்திர வருடம்
365நாள் 15 நாழிகை 31 நொடி -1 சௌர வருடம்
360 சௌர வருடம் -1 தேவ வருடம்
1வருடம்    -21600 நாழிகைகள்

தில்லை பொன்னம்பல ஓடுகள்- 21600

அதில் உள்ள ஆணிகள்  -72000 (நமது நாடிகளின்  எண்ணிக்கை )

360 மானுட வருடம் -1 தேவ வருடம் (பூமியில் 6 மாதம் = 1/2 தேவ நாள்)
4800 தேவ வருடம் -கிருத யுகம்
3600 தேவ வருடம் -திரேதா யுகம்
2400 தேவ வருடம் -துவார யுகம்
1200 தேவ வருடம் -கலியுகம்

கிருத யுகம்     -1728000   மானுட வருடங்கள்
திரேதா யுகம் - 1296000  மானுட வருடங்கள்
துவாரயுகம்    - 864000    மானுட வருடங்கள்
கலியுகம்         - 432000     மானுட வருடங்கள் (முன்பே கூறியது மேலே படிக்கவும் ).

21600*80  -கிருதயுகம் (மச்ச அவதாரம் எடுத்தது )
21600*60  -திரேதா யுகம் (ராம  அவதாரம் எடுத்தது)
21600*40  -துவாரயுகம்(மகாபாரதம் நடந்த யுகம் )  
21600*20  - கலியுகம்.

கலியுகம் துவங்கி 5114 வருடம் ஆகிறது

ஸ்ரீ கிருஷ்ணன் மகாசமாதி ஆன நாள் கலியுகத்தின் துவக்க நாள் அதாவது B .C 3102 பிப்ரவரி 18ஆம் நாள்
வெள்ளிகிழமை என்பது ஆரிய பட்டர் கணக்கு    

இந்த நான்கு யுகம் சேர்ந்தது ஒருசதுர்யுகம்(அ)மகாயுகம் எனப்படும்

இப்பொழுது நடப்பது 28ஆவது மகாயுகம் இதில்
கிருதயுகம் திரேதாயுகம் துவாரயுகம் முடிந்து கலியுகம் நடக்கிறது

இராமாயணம் நடந்தது 26ஆவது மகாயுகம்

ஸ்ரீ ராமனுக்கு அகத்தியர் சிவகீதை உபதேசித்து
சிவதீட்சை செய்து வைத்துள்ளார்

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு  உபமன்யு முனிவர் சிவதீட்சை செய்து வைத்துள்ளார்

அதாவது 12000 தேவ வருடங்கள்  
4320000 மானுட வருடங்கள்
1000 சதுர யுகம்  பிரம்மாவின் ஒருநாள் பாதி (பகல் )
1000 சதுர யுகம்  பிரம்மாவின்  இரவுகாலம்
பிரம்மாவின் பகல் காலம் -படைப்பு
பிரம்மாவின் இரவு காலம் -பிரளய காலம் இக்காலத்தில் இந்திரனோ மனிதர்களோ தேவர்களோ யாரும் இருக்கமாட்டார்கள் அனைத்து உயிர்களும் இறைவனிடம் (சிவன் )ஒடுங்கும். பிரம்மா இரவில் தூங்கி எழுந்து பகல் பொழுதில்
படைப்பை  தொடங்குவார் பிரம்மாவின் ஆயுள்
நூறு ஆண்டுகள் ஆகும் போது மகாபிரளயம்
ஏற்பட்டு பிரம்மாவும் இறைவனிடம் ஒடுங்குவார்

பிரம்மாவின் ஒரு நாள் கணக்கில் 14 இந்திரர்கள் ஆள்வார்கள்

540000 இந்திரர்கள் வந்து போகும் காலம் விஷ்ணுவுக்கு ஒரு நாள்
விஷ்ணுவின் ஆயுட்காலம்  ருத்ரனுக்கு ஒரு நாள்.

நேற்று பிறந்த சமயங்களின்  வயதை கணக்கிடலாம் சைவ(இந்து மதம்) சமய காலத்தை வரையறுக்க இயலுமா என்று தெரியவில்லை.
சிவபெருமான் உலகைப் படைத்த காலத்தையோ வேதங்களையும் ஆகமங்களையும் படைத்ததையோ திரிபுரம் எரித்ததையோ தக்கனின் யாகம் அழித்ததையோ விஷ்ணுவும்
பிரம்மாவும் அடிமுடி தேடியதையோ இன்று உள்ள காலக்கணக்கில் எவ்வாறு காட்ட முடியும். சிவபெருமான் நஞ்சு உண்ட காலம் கூட கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.இவை அனைத்தும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கும்.
யோசித்து பார்த்தாலே தலை சுத்தும்.

இவ்வளவு அற்புதம் கொண்ட இறைவனை எண்ணினால் ,புரியும் அந்த இறைவனின் ஆற்றலை.இந்த கால கணக்கை படைத்தது வேறு யாரும் அல்ல ,நாம் கும்பிடும் நம்  சிவபெருமானே.

ராமகிருஷ்ணர் கூறியது போல் ,பல்வேறு சமயங்கள் பின்பற்றுவது ஒரே இறைவனை அடையத்தான்.அந்த ஒரே இறைவன் நம் பரமசிவனே (நமசிவாய மந்திரம் கொண்டவர் ).

பாருங்கள் இந்து சமயத்தின் புனிதத்தை.இந்து மத யுக கணக்குகள்  Kavd-kavaran-yatra-lordd-shiva

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

இந்து மத யுக கணக்குகள்  Empty Re: இந்து மத யுக கணக்குகள்

Post by oviya Tue Dec 23, 2014 5:18 pm

arumai
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

இந்து மத யுக கணக்குகள்  Empty Re: இந்து மத யுக கணக்குகள்

Post by ram1994 Wed Dec 24, 2014 5:48 pm

மிக நன்றி சகோதரியே.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

இந்து மத யுக கணக்குகள்  Empty Re: இந்து மத யுக கணக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum