Top posting users this month
No user |
புத்திரதோஷம் போக்கும் மதுரை கிருஷ்ணர்கள்
Page 1 of 1

மீனாட்சி அரசாளும் மதுரையில் 2 கிருஷ்ணர் தலங்கள் சிறப்புடன் திகழ்கின்றன. மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. சனிக்கிழமை தரிசனம் இங்கே விசேஷம்
திருமேனி முழுவதும் சந்தனக்காப்பும் திருக்கரத்தில் வெள்ளி புல்லாங்குழலுமாக.... சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது. வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.
படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீதகிருஷ்ணன். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கே மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது கிருஷ்ணர் குடியிருப்பது ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில், வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.
முழுக்க முழுக்க கல்கட்டுமானமாக கோவில் அமைந்திருப்பது சிறப்பு. மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால் வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றும் ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
இரண்டு கரங்களிலும் வெண்ணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீநவந்தகிருஷ்ணன். பாமா, ருக்மணி தேவியரும் உடனிருக்கிறார்கள். இவருக்கு ஒரு சிறப்பு உண்டு. குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று குழந்தைக்கு சோறூட்டுவதாக வேண்டிக் கொண்டு (அன்னப்ரசன்னம்), அங்கு செல்ல இயலாதவர்கள் இந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணன் சந்நிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்தக் கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து, அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோவிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum