Top posting users this month
No user |
மிஹின் லங்கா விமானப் பயணத்தின் போது உறக்கத்தில் ஆழ்ந்த விமானி!- விசாரணைக்கு கோரிக்கை
Page 1 of 1

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான மிஹின் லங்காவின் விமானியான கப்டன் ஒருவர் நடுவானில் வைத்து தமது கடமையை மறந்து உறங்கிய சம்பவம் வெளியாகியுள்ளது
கடந்த மே முதலாம் திகதியன்று சார்ஜாவில் இருந்து கொழும்பை நோக்கி வந்த எம்ஜே 408 மிஹின் லங்கா விமானத்திலேயே இந்தியரான கப்டன் வாஹ் என்பவர் சுமார் 20 நிமிடங்கள் வரை உறக்கம் கொண்டதாக முறையிடப்பட்டுள்ளது.
மும்பாயை சேர்ந்த இவர், வழமையாக இடியோசையின் போதும் உறங்கக் கூடியவர் என்ற சாதனையை கொண்டுள்ளார்.
எனினும் அவர் தொடர்ந்தும் மிஹின் லங்கா விமானியாக பணியாற்றி வருகிறார்.
மே முதலாம் திகதியன்று அவர் தமது விமானி அறையை பூட்டிய பின்னர் கடும் நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.
இதன்போது விமானத்தை செலுத்தி வந்த முதல் அலுவலரான சுபீர் லாபீர் மற்றும் ஒரு முதல் அலுவலரின் உதவியுடன் அவசர கதவின் ஊடாக சென்று வாஹ்வை எழுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் இது குறித்து லாபீர் விமான நிறுவன அதிகாரிகளுக்கு முறையிடவில்லை.
எனினும் அவருக்கு உதவியாக சென்ற அதிகாரியே முறைப்பாடு செய்துள்ளார்.
வாஹ்வுக்கு உரிய ஓய்வு கொடுக்கப்படாமையே அவர் நித்திரை கொண்டமைக்கான காரணம் என்று கூறப்பட்டாலும் அவர் வழமையாக பயணங்களின் போது நித்திரை கொள்பவர் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum