Top posting users this month
No user |
சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் திடலிலும் மோசடி
Page 1 of 1

சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் திடலின் நிர்மாணப் பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டறிக்கையிலும் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிர்மாணப் பணிகளுக்காக 5 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் கிரிக்கெட் நிறுவனம் ஒரு பில்லியன் ரூபாவை மாத்திரமே செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே எஞ்சிய நான்கு பில்லியன் ரூபா நிதி, அதனை நிர்மாணித்த சீன நிறுவனத்திற்கு எஞ்சிய நிதி எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எஞ்சிய நிதி திறைசேறியில் இருந்து செலுத்துவதற்கான அனுமதி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் பெறப்பட்டிருந்ததாக கிரிக்கெட் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள் சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும், இதுகுறித்த அமைச்சரவைப் பத்திரமொன்று தயாரிக்கப்படவில்லையெனும் தகவலும் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பல்லேகல மைதானம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் குறித்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையுடன் 300 மில்லியன் ரூபா மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum