Top posting users this month
No user |
சேமியா பிரியாணி
Page 1 of 1
சேமியா பிரியாணி
1. உருளைக்கிழங்கு - 1 (நறுக்கி, வேக வைத்தது)
2. பச்சை பட்டாணி - 1/2 கப் (ஊர வைத்து, வேக வைத்தது)
3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
4. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
5. கொத்தமல்லி, புதினா - பொடியாக நறுக்கியது
6. உப்பு
7. சேமியா - 1 கப்
8. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
9. நெய் - 1 மேஜைக்கரண்டி
10. பிரியாணி இலை - 1
மசாலா அரைக்க:
1. தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
2. பட்டை
3. லவங்கம் - 4
4. பச்சை மிளகாய் - 3
5. ஏலக்காய் - 2
6. முந்திரி - 5
7. இஞ்சி துண்டு
8. பூண்டு - 4 பல்
அரைக்க வேண்டிய மசாலா'வை அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும்.
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
குழய வதங்கியதும், அரைத்த மசாலா, உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா பச்சை வாசம் போனதும், வேக வைத்த உருளை, பட்டானி சேர்த்து எண்ணெய் திரள வதக்கவும்.
இதில் 1 கப் சேமியாக்கு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேமியாவை கொட்டி கிளறி மூடி போட்டு சிறுந்தீயில் வேக வைத்து எடுக்கவும். (உப்புமா போல தண்ணீர் வற்ற வேண்டும்)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum