Top posting users this month
No user |
சனிதோஷம் நீங்க திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய ஸ்தலங்கள்
Page 1 of 1

நாம் வழிபட வேண்டிய சனி கிரக அம்சம் உடைய தலங்கள் வருமாறு:-
திருநள்ளாறு :
சனீஸ்வர பகவானின் தலமாகிய திருநள்ளாறு காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் தர்பாரண்யேசுவரர். தர்ப்பைக் காட்டில் இருந்து, தர்ப்பைப் புல்லில் இருந்து தோன்றியவர். இன்றும் இந்த லிங்கத்தின் மீது தர்ப்பைப் புல்லின் வடு உள்ளது. திருநள்ளாறு சனீஸ்வர பகவானை ஐப்பசி மாதம், ஆட்சி பெறும் தை, மாசி மாதங்களில் வழிபடலாம். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரங்கள் ஆகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் சனிக்கிழமைகளில் சனி ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்தால் மிக மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும்.
திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய திருத்தலங்கள் வருமாறு:
விருத்தாசலம்:
நள மகராஜன், சனீஸ்வர பகவானின் வேகம் தணிய, நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அப்போது விருத்தாசலத்தில் நளமகராஜன் இறைவனை வழிபட்டபோது அங்கு அவர் சந்தித்த பரத்வாஜ முனிவர், திருநள்ளாறு சென்றால் நன்மை கிடைக்கும் எனக் கூறி அருளியதால், நாமும் விருத்தாசலம் சென்று ஆலயம் தொழுது பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திருப்புகலூர்:
இத்திருத்தலம் நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ளது. நளச் சக்கரவர்த்தி சனி தோஷம் நீங்க தீர்த்த யாத்திரை செய்யத் தீர்மானித்து வந்தது இந்தத் திருத்தலமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, பின்னர் திருநள்ளாற்றில் விடுதலை ஆயிற்று. எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திருநாகேஸ்வரம்:
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ள இந்த ராகு தலத்தில்தான் நள மகராஜன், தனது இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு திருநள்ளாறு செல்வது மிகவும் சிறந்த பரிகாரமாக அமையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum