Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோவில்களின் சூட்சமம்

Go down

கோவில்களின் சூட்சமம்  Empty கோவில்களின் சூட்சமம்

Post by ram1994 Mon Dec 22, 2014 11:20 am

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும். உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். இத்தகைய கிரக சக்தி கொடுக்கப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு. மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே. இவைதான் நமக்கு துணை புரிகின்றன. பொதுவாக நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன.

ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது. ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.

சில யந்திரங்கள் கடன் தொல் லைகளைப் போக்கும். சில யந்திரங்கள் குறிப்பிட்ட வியாதி களுக்கு நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, செய்வினைக் கோளாறுகள், அகால மரணங்கள், பித்ரு தோஷங்கள், படிப்பில் தடைகள், நிரந்தர உத்தியோகம் கிடைப்பதில் பிரச்சினைகள், மேலதிகாரிகளினால் அமைதியின்மை.

திருமணத் தடை கள், தாம்பத்ய சுகக் குறைவு, தொழில் நஷ்டம், மனோ ரீதியான பிரச்சினைகள், உடல், மனவளர்ச்சி இல்லாமை, காரணமற்ற பயம், பெண்களுக்கு வெளியில் கூற முடியாமலும், தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் நிலை போன்ற ஒவ்வொரு துன்பத்திற்கும் யந்திர சக்தி பெற்ற கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன. கோவில்களின் சூட்சமம்  M08_17201503

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum