Top posting users this month
No user |
சர்த்குமாரவின் பார்வையில் சிக்கிய ரணில், ரவி, ஜோன்
Page 1 of 1

பிரதமர் ரணில விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பொதுசேவைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குணவரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புண்ணிய பிரதமராகி 40 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நடத்தும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவது என மஹிந்த ராஜபக்ச ஆதரவு குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்தவுடன் மீண்டும் மீண்டெழுவோம் எனும் கோசத்திற்கு நாடு முழுவதும் வரவேற்பு காணப்படுகின்றது.
அதனால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணநாயக்க ஆகியோர் மீது தற்போது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விரைவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum