Top posting users this month
No user |
நான் பதவி விலக நினைத்தபோது உதவி ஆசிரியர் நியமனம் வழங்கியது அரசு: இராதாகிருஸ்ணன்
Page 1 of 1

தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்களுடைய தேவைகளை அறிந்து செயற்பட்ட ஒரு தொழிற்சங்கமாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த தொழிற்சங்கம் 50ஆவது ஆண்டு பொன்விழாவை கொண்டாடுவதற்கு தகுதியான தொழிற்சங்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நான் இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற நினைத்த போது இந்த அரசாங்கம் உடனடியாக உதவி ஆசிரியர் நியமனத்தை வழங்கியது.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு நல்ல தலைவராக இல்லாவிட்டாலும் தனது பிள்ளைகளுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் தலைவராகவே இருந்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் மலையக மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி,தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றார்.
இன்று மலையகத்தை பொறுத்தவரையில் சிறு சிறு தொழிற்சங்கங்கள் ஒன்றுப்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டாலும் சில தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருவதில்லை.
அத்துடன் மலையக மக்களுடைய வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை, நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியுடன், எங்களுடைய தொழிற்சங்க கூட்டமைப்பும் இணைந்து செயற்படுமென அவா் மேலும் தெரிவித்துள்ளார்.
பசுமை பூமி காணி உறுதிப்பத்திரம் அரச அங்கீகாரம் பெற்றது: கே.வேலாயுதம்
பசுமை பூமி காணி உறுதி பத்திரம் தொடர்பில் சில அரசியல் கட்சிகளின் தலைமைகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு பசுமை பூமி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் காணி உறுதிப் பத்திரங்களில் உரியவர்கள் கையொப்பமிடவில்லை என்பதனால் அது போலியானது என சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் இது முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற ஒரு உறுதிப்பத்திரம், இந்த பத்திரம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமையை உறுதி செய்கின்ற ஒரு பத்திரம் என அவர் தெரிவித்தார்.
மேலும் காணியின் உரிமை ஜனவசம தோட்டத்திற்கும்,எஸ்.எல்.எவ்.பி தோட்டத்திற்கும் உள்ளமையினால் அவர்களே ஒப்பமிட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 200 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் சில மாதங்களில் முழுமையான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தோட்டங்களில் காணிகளை அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காணிகளை அளந்து அதன் எல்லைகளை மதிப்பிட்டு இரண்டாவது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, 2 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மலையகத்தில் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வாறு வழங்கப்படும் காணி உறுதியே இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்படுகின்ற காணி உரிமை பத்திரம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் காணியை இடமாற்றம் செய்யும் போது ஜனவசம தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து இடமாற்றுமாறும் தெரிவித்த பெந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் மலையக மக்களை இந்த நாட்டிற்கு சொந்தமான மக்களாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum