Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியும் கெரியும் கையாண்ட அணுகுமுறை

Go down

மோடியும் கெரியும் கையாண்ட அணுகுமுறை           Empty மோடியும் கெரியும் கையாண்ட அணுகுமுறை

Post by oviya Sun May 10, 2015 1:15 pm

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்களின் அணுகுமுறைகளுக்கு இடையில் ஒத்தநிலைப்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆகியோரே அவர்களாவர். இப்போது இந்தியாவும் அமெரிக்காவும் பல விடயங்களில் ஒத்துப் போகின்ற நிலையில் இருக்கின்றன.

நெருக்கமான உறவைப் பேணுகின்ற நிலையிலும், பல சவால்களை ஒன்றாகவே இணைந்து எதிர்கொள்கின்ற நிலையிலும் அவை உள்ளன.

இந்தநிலையில் தான், இலங்கைக்கு வந்திருந்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றிய அணுகுமுறைக்கும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பின்பற்றிய அணுகுமுறைக்கும் இடையில் ஒத்தநிலைப்பாடுகளை அவதானிக்க முடிந்தது.

தமது இலங்கைப் பயணத்தில் இவர் கள் இருவருமே பௌத்த மத வழிபாடுகளுக்கும் அது சார்ந்த நிகழ்வுகளுக்கும் அளித்திருந்த முக்கியத்துவமே அந்த ஒற்றுமையாகும். மற்றைய விடயங்கள் பலவற்றிலும் இவர்களுக்கிடையில் ஒத்த அணுகுமுறைகள் காணப்பட்டாலும், பௌத்த மதத்துடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் விடயத்தில், காட்டப்பட்டுள்ள ஈடுபாடு அதிகமானது- வழக்கத்துக்கு மாறானது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணத்தின் போது, கொழும்பில் மகாபோதி நிலையத்தி லும், அநுராதபுரத்திலும் பௌத்த மத வழிபாடு மற்றும் போதனைகளிலும் அதிகளவு நேரத்தைச் செலவிட்டிருந்தார். அதேயளவுக்கு, அமெரிக்க இராஜாங் கச் செயலர் ஜோன் கெரி, இலங்கையில் தங்கியிருந்த போது, பௌத்த வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்காவிட்டாலும், அதற்கென குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டிருந்தார்.

களனி ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தியதுடன், அங்கு நடந்த நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தார். அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் இணைந்து கொள்வதற்காக, கொழும்பு வந்திருந்த உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஷ்வால், மறுநாளும் கொழும்பில் தங்கியிருந்தார்.

ஜோன் கெரியுடன் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றிருக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, கங்காராம விகாரையில் நடந்த, வெசாக் விசேட பிரார்த்தனைகளில் அவர் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இரண்டாவது, ஜோன் கெரியின் சிறப்பு விமானத்தில் அவர் பயணம் செய்தால், அவருடன் கென்யா, டிஜிபோட்டி, சோமாலியா, சவூதி அரேபியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

நிஷா பிஸ்வால், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களை மட்டும் கவனிக்கும் உதவி இராஜாங்கச் செயலர். கென்யா, டிஜிபோட்டி, சோமாலியா ஆகியன ஆபிரிக்க விவகாரங்களைக் கவனிக்கும், உதவி இராஜாங்கச் செயலரின் கவனிப்புக்குரிய நாடுகளாகும்.

எனவே, நிஷா பிஷ்வால் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வொஷிங்டனில் இருக்க வேண்டியிருந்தது. காரணம், அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தனது நியமனங்களை, இராஜாங்கத் திணைக்களத்தில் கையளிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிஷா பிஷ்வாலின் கவனிப்புக்குரிய பகுதியிலுள்ள நாட்டின் தூதுவரின் நிகழ்வில் அவர் பங்கேற்க வேண்டியது அவசியம். ஜோன் கெரியின் விமானத்தில் சென்றிருந்தால், கடந்த செவ்வாயன்று வொஷிங்டன் சென்று சேர்ந்திருக்க முடியாது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை வொசாக் நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு திங்கட்கிழமையே அவர் வொஷிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். கங்காராம விகாரையில் நடந்த வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து நிஷா பிஷ்வாலும் பங்கேற்றிருந்தார்.

ஜோன் கெரியினது களனி விகாரை வழிபாடும் சரி, நிஷா பிஷ்வாலின் வொசாக் நிகழ்வுப் பங்கேற்பும் சரி, திட்டமிட்டு கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்ட விடயங்கள். அதுபோலவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினது, பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளும் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும்.

எதற்காக இந்த இரண்டு நாடுகளினதும் முக்கிய தலைவர்கள் இலங்கைப் பயணத்தின் போது, பௌத்த வழிபாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருந்தனர் என்பது கேள்விக்குரியது. இலங்கை அதிகளவு பௌத்தர்கள் வாழும் நாடு என்பதால், அவர்கள், தமது பயணத்தின் போது, பௌத்த மத வழிபாடுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருந்தனர் என்ற இலகுவான காரணம் ஒன்றை எவராலும் கூறமுடியும்.

அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, நியாயமான காரணம் தான். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அதுவே முழுமையான காரணம் என்று கருதுவதற்கில்லை. ஏனென்றால், இதற்குப் பின்னால் ஒரு பூகோள அரசியல் நலன் இருந்திருக்கிறது. ஒரு இராஜதந்திர நகர்வு இருந்திருக்கிறது.

வெளிப்படையாக கூறப்போனால், சிங்கள பௌத்த மக்களை சமாதானப்படுத்திக் கொள்ளும், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு உத்தியே இதுவாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்ததில், சிறுபான்மையினரே முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

இதன் அர்த்தம் என்னவென்றால், பெரும்பாலான, பௌத்த சிங்கள மக்கள், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவில்லை என்பதே. ஒப்பீட்டளவில், சிங்கள பௌத்தர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மஹிந்த ராஜபக்சவே வெற்றியீட்டியிருந்தார். அங்கு மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

ஆனால், சிறுபான்மையினரின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில், மைத்திரிபால சிறிசேன பெற்ற, மிகையான வாக்குகள் தான், மகிந்த ராஜபக் ஷவை தோல்வி காண வைத்தது. பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்சவை கதாநாயகனாகவே கருதியிருந்தனர்.

போரில் அவர் பெற்ற வெற்றியை மட்டுமன்றி, சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகள், ஏற்படுத்தியிருந்த மாயையும் கூட அந்த நிலைக்கு ஒரு காரணம். போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், கடைப்பிடித்த கடுமையான நிலைப்பாடு, சிங்கள பௌத்த மக்களை அந்த நாடுகளிடம் இருந்து அந்நியப்படுத்தியிருந்தது.

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து, சிங்கள பௌத்த மக்களுக்கு அநீதி இழைப்பதான கருத்துக் கூட, முன்னைய அரசாங்கத்தினால் வலுவாகப் பரப்பப்பட்டது. இதற்கு அரசியல் நலன்களே முக்கிய காரணமாகும். இத்தகைய நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை நிலையானதாக்குவதற்கும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கும், சிங்கள பௌத்த மக்களுடனான தொடர்பு அவசியம்.

அதைவிட, சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் சீனா பெற்றுள்ள செல்வாக்கை உடைப்பதற்கும், இந்த இரு நாடுகளும் முயற்சிக்கின்றன. இதற்காகவே, பௌத்த சிங்கள மக்களை நோக்கி தமது காய்களை நகர்த்தியிருக்கின்றன. இலங்கையில், பௌத்த சிங்கள மக்களின் ஆதரவு இல்லாத எந்தவொரு அரசாங்கமும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது.

இலங்கையில் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுக்கும் சரி, அமெரிக்காவுக்கும் சரி சாதகமானதொன்றாகவே அமைந்திருக்கிறது. இதனை பாதுகாக்க வேண்டுமாயின், சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அவசியம். அதைவிட, அமெரிக்கா, இந்தியா மீதுள்ள வெறுப்பும் கோபமும் தணிக்கப்பட்டு, அவர்களிடையே நல்லெண்ணம் ஏற்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன.

அதற்கு வேறெந்த வழிமுறைகளையும் விட, பௌத்த மத வழியைப் பயன்படுத்துவதே சிறந்தது என்றும் கண்டறிந்துள்ளன. ஜோன் கெரியும், நிஷா பிஸ்வாலும், நரேந்திர மோடியும், பௌத்த விகாரைகளில் ஏறி இறங்கியதன் அடிப்படை அது தான். என்றாலும், பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் அமெரிக்கா, இந்தியா தொடர்பாக இருக்கின்ற கருத்துக்களை உடனடியாக அழிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

அது சற்று மெதுவாகவே நடந்தாலும் அத்தகைய மாற்றம் ஒன்றைத் தான் இரண்டு நாடுகளும் இப்போது எதிர்பார்க்கின்றன. ஏனென்றால், இலங்கையுடன் நெடுங்கால உறவுகளை அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன. அதற்கு, தற்போதைய அரசாங்கம் போன்ற ஒரு மென்போக்குவாத அரசே தேவையானது.

தீவிர பௌத்த தேசியவாதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை கொழும்பில் நிலைப்படுத்துவதே அதற்கு வசதியானது. அதற்காகத் தான் அமெரிக்காவும் இந்தியாவும் முயற்சிக்கின்றன. இருந்தாலும், ஜோன் கெரியும், நரேந்திர மோடியும் விகாரைகளிலும், பௌத்த நிலையங்களிலும் ஏறி இறங்கியதற்கான பலன் கிடைக்குமா? என்ற கேள்வி இருக்கிறது. இதற்கான விடை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொஞ்சமேனும் கிடைக்கக் கூடும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum