Top posting users this month
No user |
Similar topics
கண்ணிவெடி அகற்றுவதில் சிக்கல்
Page 1 of 1
கண்ணிவெடி அகற்றுவதில் சிக்கல்
இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் தாமதப்படலாம் என கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வித்யா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதியுதவி குறைக்கப்பட்டிருப்பதனால் தொடர்ந்தும் இப்பணிகளை முன்னெடுப்பதில் தாமதமும், சிக்கல்நிலைகளும் தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தினால் குறித்த காலவரையறைக்குள் அந்த இலக்கை அடைவது சிக்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009ம், 10ம் ஆண்டுகளில் முகாம்களில் தஞ்சம் அடைந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளமையினால் நிதியுதவி வழங்கும் நாடுகள் கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு அதிகளவான உதவிகளை வழங்கின.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளமையினால் உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கான உதவிகளை குறைத்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதியளவு நிதியின்மையால் ஒருசில நிறுவனங்களே கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த 2011ம் ஆண்டில் 53 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், 2012 ம் ஆண்டு 22 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2013ம் ஆண்டு 8 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2014ம் ஆண்டு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையி்ல் வடக்கு மற்றும் கிழக்கில் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் இதுவரையிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இப்பகுதிகளில் குடியிருப்புக்களை விட வயல்கள் மற்றும் நிலங்கள் கூடுதலாக காணப்படுகின்றன. இதனால் மீள்குடியேற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றமையினால் மக்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டிருந்தவர்களில் 400 பேரை திடீரென ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் கடந்த வாரம் பணி நீக்கம் செய்துள்ளமைக்கு இவ்வாறான பிரச்சினைகளே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காலிக் கடற்கரையோரத்தில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு
» கடற்படை தளபதிக்கு ஏற்பட்ட சிக்கல்!
» அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது? ஆட்சி அமைப்பதில் சிக்கல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum