Top posting users this month
No user |
Similar topics
நீர் தோசை & ரசாயனா
Page 1 of 1
நீர் தோசை & ரசாயனா
நீர் தோசை செய்வதற்கு:
பச்சரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
ரசாயனா செய்வதற்கு:
மாம்பழம் - ஒன்று (அ) 2
தேங்காய் துருவல் - முக்கால் கப்
வெல்லம் / சர்க்கரை - சுவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - சிறிது (விரும்பினால்)
உப்பு - ஒரு சிட்டிகை
அரிசியை இரவே ஊற வைத்துவிடவும். மறுநாள் காலை மிக்ஸியில் முதலில் அரிசியை அரைக்கவும். அரிசி சற்று அரைபடத் துவங்கியதும் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். (அதிகமாக தண்ணீர் ஊற்றி பால் பதத்தில் மாவை கலந்து வைக்கவும்).
மாவு தயார். அதிகத் தீயில் தோசை கல்லை நன்றாக காயவிட்டு, ஒரு கரண்டி மாவை ஊற்றி, உடனே எடுத்து ஆப்ப சட்டியில் சுழற்றுவது போல் சுழற்றிவிடவும். மாவு ஒன்று போல் தோசை கல் முழுவதும் பரவ வேண்டும். பிறகு மிதமான தீயில் மூடி போட்டு வேகவிட்டு தோசையை எடுக்கவும். (தோசையின் ஓரங்கள் எழும்பி வரும் போது எடுத்துவிடலாம். மெல்லிய தோசை என்பதால் வேக அதிக நேரமாகாது, சில நொடிகளிலேயே வெந்துவிடும்).
ரசாயனா செய்ய மாம்பழத்தைத் தோல் நீக்கி வைக்கவும். பாதி பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும்.
பிறகு சிறிது தேங்காய்ப் பாலை மிக்ஸியில் ஊற்றி, அத்துடன் நறுக்காத மாம்பழம், வெல்லம் / சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (மிக்ஸியில் சுற்றி எடுப்பதால் அனைத்தும் நன்றாக கலந்துவரும்).
இந்தக் கலவையை மீதமுள்ள தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய பழத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். ரசாயனா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum