Top posting users this month
No user |
Similar topics
மனதை கொள்ளை கொள்ளும் வசந்த ஸ்தலம்
Page 1 of 1
மனதை கொள்ளை கொள்ளும் வசந்த ஸ்தலம்
சுற்றுலா செல்வது என்றாலே அது மறக்க முடியாத சுற்றுலாவாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம்.
இயற்கை காட்சிகள், குளிர்பிரதேசங்கள் என்று நமக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்றாலும் கடற்கரை சுற்றுலா என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுற்றுலாவாகும்.
அப்படி அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு வசந்த சுற்றுலா ஸ்தலம் தான் திஹா கடற்கரை.
திஹா
மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலம் திஹா கடற்கரை. அந்த மணலும், நீரும், சூரியனும் அப்படியே நம்மை மெய் மறக்க செய்துவிடும்.
இந்தியாவின் ப்ரிஹ்டன் (ப்ரிஹ்டன் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கடற்கரை ) என அழைக்கப்படும் திஹா கடற்கரைக்கு வருடத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
1923ம் ஆண்டு இங்கு வாழ்ந்து வந்த ஆங்கிலேய வணிகர் ஜான் ஃப்ரான்க் என்பவர் இந்த பகுதியை முன்னேற்ற வேண்டும் என அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் பிடன் சந்திர ராய்க்கு கடிதம் எழுதினார்.
அதன் பின்னரே, முதலமைச்சர் பிடன், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த திஹா கடற்கரையை முன்னேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையின் அமைப்பிடம் மற்றும் சிறப்புகள்
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 183 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது திஹா கடற்கரை.
இந்த கடற்கரையில் மணல் சாய்வு என்பது குறைவாக உள்ளது மற்றும் இங்குள்ள அலைகள் 7 கிலோ மீற்றர் நீளம் வரை இருக்கும்.
இந்த கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் என இரண்டையுமே பார்க்கலாம் என்பது விசேஷமான ஒன்று.
மேலும் இங்கு கடல் அலைகள் அமைதியாக இருப்பதால் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் நீச்சல் அடிக்கலாம்.
மற்ற சிறப்பு இடங்கள்
திஹாவில் பழைய மற்றும் புதிய என இரண்டு கடற்கரைகள் உள்ளன. பழைய கடற்கரையில் மணல் அரிப்பு அதிகம் என்பதால் இது அந்த அளவுக்கு அகலமாக இருக்காது.
மேலும் திடீரென வரும் பேரலைகள் இங்குள்ள சிறிய ஹொட்டல்களை பதம் பார்த்து விட்டு சென்று விடும் . மேலும் கோடைகாலத்தில் இந்த கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
புதிய திஹா கடற்கரை பழைய கடற்கரையில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
மேலும் இது பழைய கடற்கரையை விட சிறந்ததாகவே கருதப்படுகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கூடம் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பழைய கடற்கரையில் இருந்து புதிய கடற்கரையை இணைக்கும் பாதை முழுவதும் சவுக்கு வகை செடிகளால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கின்றது.
சண்டனேஸ்வர் – சிவ ஆலயம்
மற்றொரு முக்கிய இடம் சண்டனேஸ்வரில் உள்ள சிவ ஆலயம் ஆகும் . பெங்காலி மாதமான சைத்ராவில்(தமிழ் மாதங்களில் சித்திரை) இந்த ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
Shankarpur
வடக்கு திஹாவில் இருந்து சுமார் 14 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த Shankarpur கடற்கரை. இது கன்னி கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களை விட மற்ற நாட்களில் இங்கும் கூட்டம் குறைவாக இருக்கும், மேலும் அதிகாலையில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
காலையில் கடல் அலைகளில் பிரதிபலிக்கும் சூரியன், உள்ளூர் மீன்கள், படகுகளை பார்க்கலாம், புகைப்படம் பிடிப்பதற்கு இந்த பகுதி ஒரு நல்ல இடமும், ஒர் அரிய வாய்ப்பும் ஆகும்.
என்னென்ன பொருட்கள் வாங்கலாம்
திஹாவில் கடல் சிற்பிகள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட நகைகள், கைவண்ணப்பொருட்கள், அழகிய குடில்களை அமைப்பதற்கான பொருட்கள் கடற்கரை பகுதி மற்றும் திஹாவின் நகரங்களில் கிடைக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் மனதை கொள்ளை கொண்ட மைத்திரி
» மாணவனே! மனதை ஒருமுகப்படுத்து
» மனதை கொள்ளையடிக்கும் குட்டி சொர்க்கம்
» மாணவனே! மனதை ஒருமுகப்படுத்து
» மனதை கொள்ளையடிக்கும் குட்டி சொர்க்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum