Top posting users this month
No user |
Similar topics
சமூகத்தில் சிறார்கள் உளவியல்ரீதியான போருக்கு முகம் கொடுகின்றனர்: கே.சயந்தன்
Page 1 of 1

சமூகத்தில் உளவியல் ரீதியான போருக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு சிறார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.
வரணி இயற்றாலை முன்பள்ளி சிறார்களின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 4ஆம் திகதி முன்பள்ளி மைதானத்தில் ஆசிரியர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நாட்டில் மிக நீண்ட காலமாக நிலவிவந்த போர்ச்சூழல் மற்றும் அதன் பின்னரான காலத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் சிறார்கள் தான்.
இந்த நிலையில் எமது சமூகத்தில் சிறார்களின் நிலையையும், அவர்களின் எதிர்காலத்தையும் இலக்கு வைத்து உள்ளூர் நிறுவனங்களினாலும் ,புலம்பெயர்ந்த உறவுகளினாலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறார்களின் வாழ்க்கை ஆடலும் பாடலும், விளையாட்டும், மகிழ்வான கற்றலுமென ஒரு நல்ல சூழலை உருவாக்கி அதை பேண வேண்டியது நம் எல்லோரது கடமை. இன்று நம் சிறார்களின் மனதில் விதைக்கப்படுகின்ற விதைகள்தான் எதிர்காலத்தில் பெரும் விருட்சமாக விளங்கப்போகின்றன.
அதுவே எமது சமூகத்தையும், நாட்டையும் தீர்மானிக்கப்போகின்றன. ஆகவே எதை எப்பொழுது விதைக்கின்றோம் என்பதிலேயே எமது வெற்றி இருக்கின்றது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் சி.துரைராசா, கௌரவ விருந்தினர்களாக தென்மராட்சி முன்பள்ளி இணைப்பாளர் கனகேஸ்வரி, வரணி மத்திய கல்லூரி அதிபர் க.மங்களேஸ்வரன்,
வரணி அ.மி.த.க.பாடசாலை அதிபர் ஐ.தேவராசா, கிராம அலுவலர் கஸ்தூரி,சமூர்த்தி உத்தியோகத்தர் எஸ்.புனிதராஜ், வேர்ல்ட் விஸன் முகாமையாளர் றெஜினோல்ட், ப.நோ.கூ.சங்க தலைவர் அமலசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உரிமைப் போருக்கு உரமிடும் 1857
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum