Top posting users this month
No user |
குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் கோத்தா
Page 1 of 1
குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் கோத்தா
அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை தான் நிராகரிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அண்மையில் பதிவு செய்த முறைப்பாடு தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் கணக்காய்வாளர் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்து ஒரே நாளில் இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
குறித்த நிதிக்கு என்ன நடந்தது என்று விசாரித்து அறிந்து கொள்ளமுடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களில் எனது கையொப்பங்கள் எதுவும் இல்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum