Top posting users this month
No user |
கனடா வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் கைவேலியில் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்
Page 1 of 1

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு அமைய கனடா வாழவைப்போம் அமைப்பு, புலம்பெயர் உறவுகளை இணைத்து வாழ்வாதரார உதவிகளை வழங்கி வருகின்றது.
மாற்று வலுவுள்ளோர் மற்றும் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் கடந்த நான்காம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலியிலும் வழங்கப்பட்டுள்ளன.
வழவைப்போம் அமைப்பின் செயற்பாட்டாளர் ஜெயகாந்தன் தலைமையில், நடைபெற்ற நிகழ்வில் யாழ்மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வன்னி மாவட்ட பா.உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் கைவேலி கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கனடா வாழவைப்போம் அமைப்பின் இயக்குநர் மாற்றுத்திறனாளியாக இருந்த நிலையிலும் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வின் முன்னேற்றம் கருதி தொடர்ந்து பல்வேறு உதவிகளை பெருமளவு நிதியின் மூலம் வழங்கிவருகின்றது.அதன் இன்னொரு கட்டமாகவே கைவேலியில் உதவிகள் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அமரர் அருந்தவச்செல்வத்தின் நினைவாக உணவுப்பொதிகள் இந்த நிகழ்வில் கனடா வாழவைப்போம் அமைப்பு ஊடாக அமரர் சின்னத்தம்பி அருந்தவச்செல்வத்தின் 5ம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரால் 20 பெண் தலைமைத்துவத்துவ குடும்பங்களுக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது.
மிக்சர் தொழிலகம் திறப்பு
கனடா வாழவைப்போம் அமைப்பால் பேரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நோக்குடன் சிவன் மிக்சர் தொழிலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கணிசமான பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் பயன்பெற உள்ளன. மற்றும் மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீரிறைக்கும் மோட்டார் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் மிக உயரமான மனிதருக்கு அன்பளிப்பு
இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் எனப்படும் நெடுமாறன் இவர் ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் எமது சொத்தாக காணப்படுகின்றார் என்ற வகையில் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா வாழ வைப்போம் அமைப்பு அவருக்கு அன்பளிப்பு வழங்கி மதிப்பளித்துள்ளது.
தூய தமிழ் பெயர் சூட்டியவர்களுக்கு ஊக்குவிப்பு
தமிழர்கள் தமிழ் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவது அருகிவருவதை அடுத்து தமிழ்பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி முன்மாதியாக திகழ்பவர்களுக்கு கனடா வாழ வைப்போம் அமைப்பு இந்த நிகழ்வில் ஊக்குவிப்பு செய்துள்ளது.
கைவேலியில் கனடா வாழவைப்போம் அமைப்பு சுமார் ஐந்தரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதிக்கு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உரை நிகழ்த்தும்போது
போருக்குப் பின்னராக வாழ்க்கை சூழலில் எங்களுடைய மண்ணில் ஏராளம் குடும்பங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாக செய்கின்ற பிரயத்தனங்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற அமைப்புக்களில் கனடா வாழவைப்போம் அமைப்பு மிகவும் காத்திரமானது.
பல்வேறு வகையில் எங்கள் சமுகத்தை கட்டியெழுப்புவதில் அந்த அமைப்பு மிகவும் பாடுபட்டு வருகின்றது.
நிரந்தரமான தொழில் வாய்ப்புக்களுக்கு உதவுவதில் கனடா வாழவைப்போம் அமைப்பு முன்னின்று உழைக்கின்றது.
இன்றிருக்கின்ற சூழலில் இன்னும் எமது மக்களின் நிரந்தரமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. அவற்றிற்கு தீர்வு எட்டப்படும்போதுதான் மக்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றத்தை காணலாம்.
காணிப் பிரச்சனை வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக இன்னமும் தேவைகளும் பிணக்குகளும் காணப்படுவதால் நிலையான முயற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்களாக எமது மக்கள் காணப்படுகின்றார்கள்.
எனவே இன்னமும் கடுiமாக நாம் பல்வேறு பிரச்சனைகளுக்காக நாளாந்தம் போராட வேண்டியவர்களாகவே இருக்கின்றோம் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum