Top posting users this month
No user |
நட்ஸ் சிக்கி
Page 1 of 1
நட்ஸ் சிக்கி
வேர்கடலை - அரை கப்
முந்திரி - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஒரு தட்டு, கத்தி, சப்பாத்தி திரட்டியை நெய் தடவி தயாராக வைக்கவும். முந்திரியை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும்.
வேர்கடலையை வறுத்து தோல் நீக்கவும். முந்திரியையும் வேர்கடலையையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
சர்க்கரையை ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைக்கவும் (நீர் சேர்க்க கூடாது).
சர்க்கரை கிளறி விட்டு கொண்டே இருக்கவும். கரைந்ததும் பொடித்த நட்ஸ் பொடியை கொட்டி வேகமாக கிளறவும்.
கட்டி இல்லாமல் நன்றாக கலந்து உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி விடவும்.
சப்பாத்தி திரட்டியால் தேய்த்து, கத்தியால் கோடுகள் போட்டு விடவும்.
ஆறியதும் துண்டுகளாக்கி எடுக்கவும். சுவையான நட்ஸ் சிக்கி தயார். இதில் முக்கியமானது வேகமாக செய்வது. தாமதமானால் தீய்ந்து போகும். சூடு இருக்கும் போதே கோடுகள் போடாவிட்டால் ஆறியதும் சரியான ஷேப்பில் துண்டுகளாக்க இயலாது. இதில் நீங்கள் விரும்பும் எத்தனை வகை நட்ஸ் (பாதாம், பிஸ்தா, வால்நட்) வேண்டுமானாலும் சேர்க்கலாம். நட்ஸை பொடிக்காமல் முழுதாகவே கூட சேர்த்து செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum