Top posting users this month
No user |
நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1

இந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் திகதி, நடிகர் சல்மான்கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விபத்தில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது பற்றி சல்மான்கானிடம் நீதிபதி தேஷ்பாண்டே விசாரித்தபோது, ‘‘சம்பவத்தின் போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை என்றும் என்னுடைய டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார் எனவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் டிரைவர் அசோக் சிங், நடிகர் சல்மான்கான் தனது வாக்குமூலத்துக்கு வலுசேர்க்கும் வகையில், விபத்துக்குள்ளான காரை நான் தான் ஓட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் 21ம் திகதியுடன் இருதரப்பு வாதமும் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை மே 6ம் திகதி வழங்குவதாக கூறினார். அதன் படி இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
2002ம் ஆண்டு மும்பையில் நடந்த கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் தான் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொது அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் லைசென்ஸ் இல்லாமலும் கார் ஓட்டி இருக்கிறார். எனவே சல்மான்கானை குற்றவாளி என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சல்மான்கான் ‘‘நான் நிரபராதி என்றும், நான் கார் ஓட்டவே இல்லை எனவும் கண்ணீர் மல்க கூறினார்.
ஐந்து ஆண்டு சிறை தண்டனை
இந்நிலையில் பிற்பகல் 1 மணி அளவில் தண்டனை தீர்ப்பை அளித்த நீதிபதி, சல்மான் கான் மீதான 8 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சல்மான் கானை மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சல்மான் கான் தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முகப்பு Print Send Feedback

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum