Top posting users this month
No user |
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்
Page 1 of 1

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்களுடைய கையொப்பங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமையினை கண்டித்து இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய தினம் காலை 9 மணியளவில் குறித்த எதிர்ப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரன் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தமது எதிர்ப்பு குறித்து ஆசிரியர் சங்கத்தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாகவுது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினால் (JUSTA) குறிப்பிட்ட ஒரு விடயத்திற்காக 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அங்கத்தவர்கள் பலரது கையொப்பங்கள் புகைப்படப்பிரதி எடுக்கப்பட்டு இதனோடு தொடர்பில்லாத பல உள்நோக்கம் கருதிய விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமையை கையொப்பமிட்ட எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் ஆதாரபூர்வமாக அறிந்து பாரிய அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதோடு அதனை எமது சங்கத்தின் உடனடி நடவடிக்கைக்காக தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இவ்வாறாகப் புத்திஜீவிகளை உறுப்பினர்களாகவும் நிர்வாக உறுப்பினர்களாகவும் பதவிவகிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மேற்படி செயற்பாடு ஒரு குற்றவியல் செயற்பாட்டிற்கு ஒத்ததாகும்.
இதனை ஒரு புத்திஜீவிகள் சங்கம் மேற்கொண்டமையானது, மிகவும் அருவருக்கத்தக்கதும் கடும் கண்டனத்திற்குமுரியதுமாகும். இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தங்களை முதலில் தூய்மைப்படுத்த முயலவேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum