Top posting users this month
No user |
வாழைச்சேனையில் 2 கிலோ கஞ்சாவுடன் நபரொருவர் கைது- மக்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த சந்தேக நபரை கைது செய்ததாக மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.வஹாப் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு கஞ்சா கடத்துவதாக கிடைக்கபெற்ற முறைப்பாட்டையடுத்தே பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை பொலிசார் வழிமறித்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து இரண்டு கிலோவும் 500 கிராமும் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சைக்கிளையும் சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்ததுடன், இக்குற்ற செயலுடன் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிம் சகோதரர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதாகவும், அதற்கு தீர்வு பெற்றுத்தருமாரு கோரி இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிக்குரிய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லீம் சகோதர்கள் தடையாக இருப்பதாகவும் அதனால் எங்களது காணிகளை தங்களுக்கு மீட்டுத்தருமாரும் கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீறாவோடை தமிழ் பிரதேசத்தில் இருந்த பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களும் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான பாதை வழியாக ஊர்வலமாக வந்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினையும் உதவி பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன்,
அக் காணிப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக மாவட்டச் செயலாளருக்கு தெரியப்படுத்துவதுடன், வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்வதாகவும், இன்றில் இருந்து அத்துமீறி காணிகளை சட்ட விரோதமாக பராமரிக்க வருபவர்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று வாழைச்சேனை பொலிஸார் உறுதியளித்ததையடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum