Top posting users this month
No user |
தேர்தலின் பின்னர் மலையகத்தவர்களுக்கு தனி வீடு: திகாம்பரம் உறுதி
Page 1 of 1

தேர்தலின் பின்னர் மலையக மக்களின் வீட்டு தேவைகள் பூர்த்தியாக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றி வந்தனர்.
இதனால் மக்கள் அவர்களை புறக்கணித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது முழுமையான ஆதரவினையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் மலையக மக்களின் தனி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எமது அரசாங்கம் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.
மேலும் மண் சரிவினால் பாதிப்படைந்த மீரியாபெத்த பகுதியில் 75 வீடுகளை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மலையக மக்களுக்கான ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட 376 வீடுகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது அமைச்சு குறிப்பிட்ட படி வேலைகளை நிறைவேற்றவில்லை மக்களுக்கான வீடுகளை கையளிக்கவில்லை என பலரும் பல விதமான பொய் குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்
ஆனால் அவை உண்மையல்ல என்பதை உணர்த்துவது எமது கடமை.
வீடு கட்டுவது என்பது வெறுமனே ஒரு நாளில் அடிக்கல்லினை நாட்டி மறு நாளில் வீட்டினை கட்டி முடிக்க முடியாத ஒரு விடயமாகும்.
கொழும்பில் என்றால் அவ்வாறு செய்யலாம் ஆனால் மலையகம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்ந்து ஏற்படும் இடங்கள்.
எனவே மழை இல்லாத காலம் பார்க்க வேண்டும்.
அத்துடன் இப்பிரதேசத்தில் நில நடுக்கம் ஏற்படுமா இல்லை இப்பிரதேசத்தில் ஏதாவது விழிப்புணர்வு தேவையா என்பதை எல்லாம் ஆராய்ந்த பின்னரே பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
பெருந்தோட்ட துறையில் பாதிக்கப்பட்ட மக்கள் 5000 பேர் வரையில் இருக்கிறார்கள்.
தற்போது அவர்களுக்குரிய 376 வீடுகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
7 பேர்ச்சஸ் அளவில் 550 சதுர அடி பரப்பில் ஒரு வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.
270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்கென இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum