Top posting users this month
No user |
வடக்கில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன! காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது!- சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்
Page 1 of 1

வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களினால் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன
இது விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க,
இலங்கையில் சட்டம் சொல்கிறது குற்றவாளியாக இருந்தாலும் கூட நீதிமன்றத்தை நாடி அவனுடைய நியாயத்தை சொல்லலாம் என்று. எனவே காட்டுச் சட்டங்களை சுட்டிக்காட்டாதீர்கள்.
அவ்வாறான காட்டுச் சட்டங்களை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது என சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதில் வழங்கியிருக்கின்றார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் சுன்னாகம் பிரதேச சபை தலைவர் எஸ்.பிரகாஷ் யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை குறைப்பதற்கான
நடவடிக்கை போதாது எனவும், கூறியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய காலத்தில் அவர்களுடைய இறுக்கமான சட்டங்கள் காரணமாக குற்றச் செயல்கள் குறைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
வாள்வெட்டுக் குழுக்களை கதாநாயகர்களாக மாற்ற வேண்டாம்: லலித் ஏ.ஜயசிங்க
யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டு மற்றும் றவுடித்தனம் செய்யும் குழுக்கள் கைது செய்யப்படும்போது ஆவா குழு, மாத்தையா குழு என அவர்களுக்கு பெயர் சூட்டி அவர்களை கதாநாயகன்களாக மாற்றவேண்டாம். என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கே ட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஒரு முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.
அதாவது யாழில் றவுடித்தனம், மற்றும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்படும்,குழுக்களுக்கு பொலிஸார் ஆவா குழு, மாத்தையா குழு என பெயர் சூட்டுவதாக குற்றம்சாட்டியதுடன், அண்மையில் கைது செய்யப்பட் மாத்தையா குழு என்ற குழுவிலிருந்தவர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தபோது அங்கே பொலிஸ் சென்றதாகவும் அவர்கள் பொலிஸை பார்த்தவுடன் மாத்தயா எங்கிடம் வாள் இல்லை.
நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என கூறியிருக்கின்றனர். அதனையடுத்து அவர்களுக்கு மாத்தையா குழு என பொலிஸார் பெயர் சூட்டிவிட்டதாக குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் இதனை மறுத்த சிரேஷ் ட பிரதி பொலிஸ்மா அதிபர் அவ்வாறான பெயர்களை அல்லது பட்டங்களை பொலிஸார் அவ ர்களுக்கு சூட்டுவது கிடையாது. ஆனால் அந்தப் பெயர்களை, மக்களே கொடுக்கின்றார்கள்.
மக்கள் கொடுப்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி அவர்களை கதாநாயகர்களாக மாற்றுகின்றன. எனவே சபையிலிருக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு இவ்வாறான குழுக்களை கதாநாயகர்களாக சித்தரித்து அவர்களுக்கு பெயர் சூட்டுவதை கைவிடுங்கள் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
யாழில் போலி பல் சிகிச்சை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்.நகர் பகுதியில் போலி பல் சிகிச்சை நிலையங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை இல்லை என பல் சிகிச்சை வைத்தியர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிவில் பா துகாப்பு குழு கூட்டத்திலேயே மேற்படி விடயம் தொடர்பாக வைத்தியர்கள் குற்றம் சுமத்தியி ருக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் யாழ்.போதனா வைத்தியசா லைக்கு முன்பாக பல் சிகிச்சை மருத்துவ உதவியாளர்களால், பல் சிகிச்சை நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் அவ்வாறான சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்த முடியாது. என மருத்துவ சட்டம் கூறுகின்றது.
ஆனால் இவர்கள் சத்திரசிகிச் சைகளையும் கூட நடத்துகின்றார்கள். மேலும் தரகர்கள் ஊடாக சிகிச்சைக்கு 25ஆயிரம் தெ hடக்கம் 30 ஆயிரம் வரையில் பணமும் அறவிடப்படுகின்றது.
இந்நிலையில் விடயம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் நடவடிக்கை இல்லை. என மருத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து சi பயில் இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து என்ன நடந்தது? எதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினர்.
இதன்போது அந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதாக பொறுப்பதிகாரி பதிலளித்தார். இதனையடுத்து மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜயசிங்க சுமுகமாக தீர்க்கப்பட்டதா? என கேட்டபோது அவ்வாறு தீர்க்கப்படவில்லை.
பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. என அ வர் கூறியதையடுத்து பொறுப்பதிகாரியை பார்த்து பொய் சொல்லவேண்டாம். என திட்டிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வைத்தியர்களின் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறும், இரு தினங்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum