Top posting users this month
No user |
Similar topics
13ஐ அமுல்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்து
Page 1 of 1

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் 13வது திருத்தச்சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்சி மாற்றம், அதிகாரப்பரவலாக்கம் ஆகியன தமிழ் பேசும் மக்களை பாதுகாக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களின் போது கொடுத்த வாக்குறுதிகளுக்கமைய ஜனாதிபதியும், பிரதமரும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆட்சி மாற்றம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் 19வது திருத்தம் எந்த விதத்திலும் தொடர்புடையதல்ல.
தமிழ் பேசும் மக்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்திலேயே ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்த்தார்கள்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
மேலும் சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதுடன், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை என அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது தற்போதைய அரசாங்கம் வட,கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளையும் கவனத்திற் கொள்ளும் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் இன்று அரசாங்கம் திருத்தங்களை முன்வைத்து சிறிய மாற்றங்களை முன்னெடுக்கின்றமையால் நாட்டில் சமூகங்களுக்கிடையில் எதிர்பார்க்கக்கூடிய நல்ல மாற்றங்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை.
தேசிய கொடியில் மற்றும் தேசிய கீதத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதும் நாட்டில் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
சிறுபான்மை மக்களின் அடையாளங்களை பாதுகாத்தல், தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல், தொடர்பிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவற்றை ஒரு சில மாற்றங்களால் ஏற்படுத்துவது சாத்தியமற்றது.
அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
முழுமையாக அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
திருத்தங்கள் கொண்டு வந்து காலத்தை கடத்துவதை விடவும் அரசியலமைப்பில் முழுமையான மாற்றம் கொண்டுவந்து மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதே சிறந்த வழிமுறையாகும்.
அதை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா, எம்பெக் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்க
» சம்பந்தன் புத்திசாலி: முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டு
» தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum