Top posting users this month
No user |
தனியார் மயப்படுத்தல் என்ற வார்த்தையை தடைசெய்யப்பட்ட வார்த்தையாக மாற்றினோம்!– நிதியமைச்சர்
Page 1 of 1

ஒரு குடும்பம் நாட்டை ஆள்வதா அல்லது 210 லட்சம் குடும்பங்கள் நாட்டை ஆள்வதா என்ற எண்ணத்திலேயே கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டின் பெரும்பாலான மக்கள் தமது வாக்குகளை அளித்ததாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கம் ஒன்றை மக்கள் ஏற்படுத்தியதுடன் அதன் பிரதிபலனை நல்லாட்சியின் கீழ் அனுபவித்து வருகின்றனர் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம், தனியார் மயப்படுத்தல் என்ற வார்த்தையை தடைசெய்யப்பட்ட வார்த்தையாக மாற்றியுள்ளது.
தனியார் நிறுவனங்களை விட முன்னோக்கி செல்லும் வகையில் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்.
அத்துடன் அரச நிறுவனங்களின் வருமானத்தை 15 வீதமாக அதிகரித்து செலவை 10 வீதமாக குறைக்க அனைத்து அரச ஊழியர்களும் முயற்சிக்க வேண்டும்.
காலை 10 மணிக்கு வேலைக்கு சென்று மாலை 3 மணிக்கு வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் எனவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum