Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைஞர்கள் தாய்மண்ணின் மீது பற்றுள்ளவர்களாக மாறவேண்டும் அரியநேத்திரன் வலியுறுத்தல்

Go down

இளைஞர்கள் தாய்மண்ணின் மீது பற்றுள்ளவர்களாக மாறவேண்டும் அரியநேத்திரன் வலியுறுத்தல் Empty இளைஞர்கள் தாய்மண்ணின் மீது பற்றுள்ளவர்களாக மாறவேண்டும் அரியநேத்திரன் வலியுறுத்தல்

Post by oviya Thu Apr 30, 2015 1:21 pm

தமிழினத்தின் மரபுகளை பாதுகாக்க,கலாச்சார நிகழ்வுகளை நடாத்தினால் மட்டும் போதாது தமிழினத்தின் தனித்துவமான அரசியலை பலப்படுத்துவதன் மூலமே அவற்றை பாதுகாக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கோயில்போரதீவு உதயதாரகை விளையாட்டுக்கழகத்தின் சித்திரைப்புதுவருட கலாசார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கையில் இல்லையெனில் இன்று தமிழ் இனத்தின் அடையாளங்கள் அழிந்திருக்கும்.

குறிப்பாக 2009மே 19ஆம் திகதியுடன் ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்பு தாமே ஏகபோக தலைவன் என மமதையில் இருந்தார் முன்னால் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச,

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு வழங்கியதனாலேயே இன்று சர்வதேசத்தின் பார்வை எம் மீது திரும்பியது.

விடுதலைப்புலிகளின் ஆயுதபோர் மௌனித்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டிருந்தால் இந்த 5 வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களான சின்னவத்தை பாலையடிவட்டை ஊடாக பட்டிப்பளைகெவிளியாமடு புளுகுநாவ மற்றும வவுணதீவு செங்கலடி எல்லைகள் எல்லாம் பாரிய சிங்கள குடியேற்றமும் புத்தசிலைகளும் முளைத்திருக்கும் .

தாந்தாமலை முருகன் ஆலயத்தில் "புத்தம் சரணம் கச்சாமி"ஒலித்திருக்கும், இவைகளை நேரில் சென்று தடுத்தது மட்டுமில்லாமல்,நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்தோம்.

மட்டுநகரில் பிள்ளையாரடியில் திட்டமிட்டு ஒரு பெரிய புத்தர் சிலையை மட்டக்களப்பு மங்கல ராம விகாரை புத்தபிக்கு இராணுவ உதவியுடன் அமைக்க முற்பட்ட வேளையில் மக்களுடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்தியதுடன் பாராளுமன்றத்திலும் ஆட்சேபனை குரல் எழுப்பி அதை உடனடியாக தடுத்தோம்.

மகிந்த அரசு நில அபகரிப்பு செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டவேளையில் எல்லாம் அவற்றுக்கெல்லாம் துணிந்து முகம்கொடுத்த கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைவருமே அறிவார்கள்.

இளைஞர்கள் ஒரு நாட்டின் பெரிய சக்தி,பிறந்த நாட்டில் தமது இனத்தின் பாரம்பரிய கலை பண்பாடுகளை பேணும் வகையில் இவ்வாறான கலாசார விளையாட்டுவிழாக்களை நடத்துவது பாராட்டத்தக்கது.

ஆனால் இவ்வாறான கலைபாரம்பரியங்களை தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டுமானால்அவைகளை தக்கவைக்ககூடிய அரசியல்பலத்தையும் இனம்கண்டு அதையும் பலப்படுத்த வேண்டும்.

தமிழினத்தின் அரசியல் பலமாக இன்று இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே இந்த பலத்தினைஉறுதிப்படுத்த எந்த தேர்தல் வந்தாலும் அந்தகட்சியின் சின்னமான வீடு சின்னத்திற்கு தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

கோயில்போரதீவு மண் கடந்த கால விடுதலைப்போராட்டத்தில் பல மாவீர்களைஆகுதியாக்கிய கிராமம் என்பதை கூறுவதில் பெருமையுண்டு. இந்தவிளையாட்டுவிழாவை நடாத்தும் உதயதாரகை விளையாட்டுக்கழகம் அரைநூற்றாண்டு பழமை வாய்ந்த கழகமாகும்.

பல சாதனைகளையும் சோதனைகளையும் கண்டுதொடர்ந்தும் விளையாட்டுமன்றி, கல்வியில் சாதனை படைத்த மாணவர்களையும் இக்கழகம் பாராட்டுவது போற்றுதலுக்குரியதாகும்.

பிறந்த ஊரில் பற்றுள்ள இளைஞர்கள் அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் மீதும் பற்றுள்ளவர்களாக மாறவேண்டும் தாய்மீது பற்றுள்ளவனுக்குத்தான் தாய்நிலத்திலும்பற்றிருக்கும் எனவும் அரியநேத்திரன் மேலும் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum