Top posting users this month
No user |
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுவதை ரணில் தடுத்தார்!
Page 1 of 1

இலங்கையின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை மாத்திரம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் இறுதி நேரத்தில் அரசியலற்ற ஆணைக்குழுவாக காப்பாற்ற முடிந்துள்ளது.
இந்த திருத்தத்தின்கீழ் 10பேரைக்கொண்ட அரசியலமைப்புசபை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே விதந்துரைக்கப்பட்டபடி இந்தக்குழுவில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் ஏனைய ஏழு பேர் சுயாதீன ஆட்களாகவும் இருப்பர் என்று கூறப்பட்டது.
எனினும் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரினர்.
இதன்காரணமாக அவர்கள் 19க்கு எதிராக வாக்களிப்பதற்கும் முயற்சி செய்தனர்.
இதனையடுத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த ஆணைக்குழுக்களில் பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு போன்றவற்றிற்கு அரசியல்வாதிகளே. உறுப்பினர்களை நியமிப்பர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தேர்தல் ஆணைக்குழு மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு பதில்சொல்லக்கூடிய சுயாதீன ஆணைக்குழுவாக செயற்படும்.
அதன் அறிக்கை 6 மாதத்துக்குள் வெளியிடப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை பொலிஸ் ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளாமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தண்டிக்கப்படுவதை தடுக்கும் நோக்கமும் இருக்கலாம் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum