Top posting users this month
No user |
தமிழரின் தீர்வுக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அவசியம்
Page 1 of 1

இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் நடுநிலைமை வகிக்க சர்வதேசம் முன்வரவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையில் நாளை இடம்பெறும் அமர்வில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் விவகாரம் 65 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ளது.
அத்துடன் யுத்தம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை இப்பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்து கொண்டே இருக்கின்றன.
எதனால் நாட்டில் யுத்தம் இடம்பெற்று என்பது தொடர்பில் ஆராயாமல் உள்ளதையும் கருத்திற்கொண்டும்,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இலங்கை குறித்த 2014ம் ஆண்டு மார்ச் தீர்மானமானது நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக ஐ.நா. தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க முன்வந்திருப்பதை கருத்திற்கொண்டும்,
இலங்கையில் ஜனவரி மாதத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்மையை கருத்திற்கொண்டும் குறித்த தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தினதும், ஐ.நா. சபையினதும் வழிகாட்டல்கள், அனுசரணை வழங்கல், மத்தியஸ்தம், உறுதியளிப்பு மற்றும் தீவிர பங்களிப்பு இல்லாமலும் நிரந்தரமானதும் சமத்துவமானதுமான தீர்வு ஒன்றைக் காண முடியாது என வடமாகாண சபை உறுதியாக நம்புகின்றது.
ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கி தமது தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என வடமாகாண சபை அழைப்பு விடுக்கின்றது.
இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கமாக கொண்டு இலங்கை அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு இச்சபை அழைப்பு விடுக்கின்றது உள்ளிட்ட கோரிக்கைகள் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இத்தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum