Top posting users this month
No user |
Similar topics
வெங்காய குழம்பு
Page 1 of 1
வெங்காய குழம்பு
தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 10
தக்காளி - 2
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை தண்ணீரில் கால் மணிநேரம் ஊறவிடவும்.
சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து ஒரு கடாயில் எண்ணெய் இட்டு காய்ந்தவுடன் அதில் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் நறுக்கி போட்டு நன்கு வதக்கவும் வதக்கியபின் எடுத்து ஆற வைத்து தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து போட்டு தாளித்து அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும்
வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கி எண்ணெய் மேலாக மிதந்து வரும்போது இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum