Top posting users this month
No user |
கொழும்பில் பன்னிரு கட்சிகளின் மேதின கூட்டங்கள்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பன்னிரு கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ஹைட்பார்க் மைதானத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் பி. ஆர். சி. மைதானத்திலும், தினேஷ் குணவர்தன தலைமையிலான கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி விளையாட்டு மைதானத்தில் மே தின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
இவற்றோடு இணைந்ததாக கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொழிற் சங்கங்களின் 15 மே தினக் கூட்டங்களும் மே தின ஊர்வலங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் இணைந்த மே தின ஊர்வலம் மூன்று பகுதிகளிலிருந்து பிரதான விழா மைதானத்தை வந்தடையவுள்ளன.
கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கிற்கு முன்பாகவும் கண் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்தும் மருதானை காமினி தியேட்டர் சுற்றுவட்டத்திலிருந்தும் ஊர்வலங்கள் ஆரம்பமாகவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலம் கொழும்பு நகர மண்டப சுற்று வட்டத்திலிருந்து ம.வி.மு.வின் மேதின ஊர்வலம் மஹரகம ஜெயசிங்க மண்டப சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
தத்தமது மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் திருகோணமலையிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஹட்டன், தலவாக்கலை பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.
மலையகத்தில் நடைபெறும் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதியாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெறும் முதலாவது மே தின கூட்டம் இதுவாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum