Top posting users this month
No user |
போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதாவின் நெருங்கிய சகா கைது
Page 1 of 1

பிரவுண் சுகர் ரக போதைப்பொருளுடன், வெலே சுதாவின் பிரதான சகா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி 13வது ஒழுங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட 17 லட்சம் ரூபா பெறுமதியான 200.48 கிராம் பிரவுண் சுகர் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை, பாணந்துறை வலானை மத்திய மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சர்வதேச போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதாவின் பிரதான சகாவான படோவிட ரஜித என பொலிஸார் கூறியுள்ளனர்.
மாலைதீவு பிரஜை ஒருவருக்கு வழங்குவதற்காக சந்தேக நபர்கள் பிரவுண் சுகர் ஹெரோயினை கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் விற்ற பணத்தை வைத்திருந்தமை தொடர்பில், இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் நிலுவையில் உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum