Top posting users this month
No user |
அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பினார்?
Page 1 of 1

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் மத்திய வங்கியின் ஆளுனர் விடுமுறை பெற்றுக்கொண்டிருந்தார்.
கடந்த 23ம் திகதி அவர் கடமைக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் வெளியீடு தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திறைசேரி உண்டியல்கள் காரணமாக பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மூவர் அடங்கிய குழுவொன்று விசாரணை நடத்தி, அந்த விசாரணைகளின் மூலம் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஆளுனர் தற்காலிக அடிப்படையில் விடுமுறை பெற்றுக்கொண்ட போது அரசாங்கம் அதனை ஊடகங்களில் அறிவித்த போதிலும், மீள கடமைக்கு திரும்பியமை குறித்து அறிவிக்கவில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு குற்றமற்றவர் என அறிவித்த போதிலும் மோசடிகளில் தொடர்பிருப்பதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum