Top posting users this month
No user |
Similar topics
ஆடி மாதம் அம்மன் அரவணைக்கும் மாதம்…
Page 1 of 1
ஆடி மாதம் அம்மன் அரவணைக்கும் மாதம்…
சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் ammamமகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள்.
எந்த பிரச்னை ஆனாலும் ‘‘அம்மா, தாயே, மகாசக்தி, தயாபூரணி…’’ என்று கைகூப்பி குறை தீர அருள் கேட்டு கண்ணீர் மல்கி நிற்கிறது பக்தர் குழாம். பால்குடம் சுமந்தும் மஞ்சள் பூசியும் குங்குமம் சாற்றியும் பொங்கல் வைத்தும் வேப்பிலை சேலை அணிந்தும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறது. ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்தி தான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்பதுதான். எனவே, ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் பெருக்கும் ஆலயங்களை தரிசிப்போம். குங்கும, சந்தன, மஞ்சளாக வாழ்வு கமழ்வதை அனுபவத்தில் உணர்வோம்.
வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள் அம்பிகை. உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது கோயில் கட்டி வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டுப் போரில் வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக்கொண்டு, அந்த மாரியின் அருளால் போரில் வெற்றியும் பெற்றார். உடனே, அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தார். பரிவார தெய்வங்களாக விநாயகரும் கருப்பண்ணசாமியும் அமைந்தனர்.
சமயபுரம், தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் பக்தர் மயம்தான். மாவிளக்கு ஏற்றுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு காணிக்கை செலுத்துதல் என்று பலவித பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது…
» ஆடி மாதம் சதுரகிரி மலை பயணம்
» ஆடி மாதம் சதுரகிரி செல்வோம் -சூட்சமம்
» ஆடி மாதம் சதுரகிரி மலை பயணம்
» ஆடி மாதம் சதுரகிரி செல்வோம் -சூட்சமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum