Top posting users this month
No user |
மகிந்தவின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க வேண்டும்: பிரதி வெளிவிவகார அமைச்சர்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாத்த குற்றவாளிகள் யார் என்று கேள்வி எழுப்பும் உரிமை அவருக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களுக்கு இருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது, என்னிடம் தவறு இல்லை என்று நான் கூறவில்லை. என்னிடமும் தவறுகள் இருந்தன.
குற்றம் செய்த சிலரை நாங்கள் அழுத்தங்களை கொடுத்து விடுதலை செய்தோம். சிலர் செய்த குற்றங்களுக்காக அவர்களை நாங்கள் தண்டிக்கவில்லை. அவற்றை நாங்கள் மூடி மறைக்க முயற்சித்தோம். இவை தான் நான் செய்த தவறுகள், அவற்றுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் எனக் கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த பாரதூரமான தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் யார், அவர்கள் என்ன குற்றம் செய்தனர் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவருக்கு வாக்களித்த 58 மக்களுக்கு இருப்பதுடன் கேள்வி எழுப்பும் உரிமையும் உள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என்று தெரிந்துதான் முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தனது சட்டத்தரணிகளுடன் செல்ல மறுக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தற்போதைய பகிரங்க வாக்குமூலத்தினால், அவருக்கு கிடைத்த 58 லட்சம் வாக்கள் தற்போது 20 லட்சமாக குறைந்து விட்டது.
முன்னாள் ஜனாதிபதி தான் பதவியில் இருக்கும் போது இதனை கூறியிருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து தண்டனை வழங்கியிருக்க முடியும். முன்னாள் ஜனாதிபதியின் வாய் தற்போது பிரேக் இன்றி பேசுகிறது.
இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்று என்னவெல்லாம் கூறபோகிறாரோ என்று அச்சம் கொண்டுள்ள அவர்கள் தவறுகளை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் ஆணைக்குழுவிற்கு செல்வதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஆயிரம் மின்சார நாற்காலிகளுக்கு செல்லக் கூடிய வீரர் என மகிந்த ராஜபக்சவை பற்றி பெருமை பேசியவர்கள் அவர் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு செல்வதை தடுக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருது நகைப்புக்குரியது எனவும் அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum