Top posting users this month
No user |
Similar topics
6 வயதில் முன்ஜென்ம கணவனைத் தேடியலைந்த அதிசய சிறுமி!
Page 1 of 1

மறுபிறவி தொடர்பான கதைகள் நம்ப முடியாதவாறு இருந்தாலும், 1930ம் ஆண்டு முதல் தொடர்ந்த ஆய்வுகள் மற்றும் எண்ணற்ற விசாரணைகள் மறுபிறவி ஒன்று உள்ளது என்பதை காட்டுகிறது.
டெல்லியில் 1926ம் ஆண்டு சாந்தி தேவி என்பவர் பிறந்தார். அவர் 4 வயது குழந்தையாக இருந்தபோது, தான் மறுபிறவி எடுத்துள்ளதாக, தன்னுடைய பழைய நினைவுகளை கூற ஆரம்பித்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார்.
ஒரு 4 வயது குழந்தையால் எவ்வாறு இது போன்று கூற முடிகிறது என்று குழப்பம் அடைந்த மகாத்மா காந்தி, இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை நியமித்தார். இது தொடர்பான விசாரணை அறிக்கை 1936ம் ஆண்டு வெளியானது.
Bal Chand Nahata என்ற எழுத்தாளர் வெளியிட்ட Punarjanma Ki Paryalochana என்ற புத்தக்கத்தில், சாந்தி தேவி தனது முன் ஜென்மத்தை சரியாக கூறுகிறார் என்றும், விசாரணையின் மூலம் அவர் மறுபிறவி எடுத்துள்ளது உறுதியாகிறது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் இந்திரா சென் (Indra Sen) என்பவர் இதனை மறுத்து 1936ம் ஆண்டு எழுதிய புத்தகம் 1952ம் ஆண்டு வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து சாந்தி தேவியை சுவிடன் நாட்டு எழுத்தாளர் பேட்டி எடுத்தார். இந்த பதிப்பு 1994ம் ஆண்டு வெளியானது. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு 1998ம் ஆண்டு வெளிவந்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
”சாந்தி தேவி 4 வயதாக இருந்தபோது, தனது பெற்றோர்களிடம், தன்னுடைய உண்மையான வீடு மதுராவில் இருப்பதாகவும், அங்கு தன் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாகவும், தற்போது டெல்லியில் உள்ள இடத்தில் இருந்து 145 கி.மீ தொலைவில் அந்த வீடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையெல்லாம் பெற்றோர்கள் கண்டுகொள்ளாத காரணத்தால் அவர் தனது 6வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தன் கணவனை தேடி மதுரா செல்ல முயன்று பின்னர் வீடு திரும்பினார்.
பள்ளியில் இது தொடர்பாக அவளின் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் அவளிடம் விசாரிக்கையில், தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், குழந்தை பிறந்து 10 நாட்களில் தான் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அப்போது அவளின் ஒவ்வொரு வார்த்தையும் மதுரா பாணியில் இருந்துள்ளது. தனது கணவர் ஒரு வணிகர் என்றும், அவர் பெயர் கேடார் நாத் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கேட்ட தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவருக்கு மதுராவில் கேடார் நாத் என்ற வணிகர் தெரியும். அவரது மனைவியும் 9 வருடங்களுக்கு முன் குழந்தையை பெற்று 10 நாட்களில் இறந்துள்ளார். அவரது பெயர் `லுக்டி தேவி.’
கேடார் நாத் டெல்லி வந்தபோது, அவரையும், அவரது குழந்தையும் எளிதாக அடையாளம் கண்டுள்ளார் சாந்தி தேவி. இது கேடார் நாத்திற்கு ஆச்சரியத்தை அளித்தது.
அதுமட்டுமல்லாது லுக்டி தேவியின் பல தகவல்களை கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளார் சாந்தி தேவி. இதனை கேட்ட கேடார் நாத், சாந்தி தேவி, லுக்டி தேவியின் மறுபிறவி தான் என்று அடித்துக் கூறினார்.
இதை பற்றி அறிந்த மகாத்மா காந்தி அந்த குழந்தையை நேரில் சென்று சந்தித்து, இது தொடர்பான விசாரணையில் அதிரடியாக களமிறங்கினார்.
இந்த விசாரணை குழு, சாந்தி தேவியை அழைத்து கொண்டு 1935ம் ஆண்டு மதுரா புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த சில அக்கம்பக்கத்து வீட்டு மனிதர்களை அடையாளம் கண்ட சாந்தி தேவி, லுக்டி தேவியின் தாத்தாவையும் அடையாளம் கண்டார்.
மேலும், லுக்டி தேவி மரணப்படுக்கையில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் கேடார் நாத் புறக்கணித்தையும் கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். பின்னர் அந்த சிறுமி தனது பெற்றோர்களுடன் வீட்டுக்கு திரும்பினார்.
விசாரணை குழு சாந்தி தேவி, லுக்டி தேவியின் மறுபிறவியே என்று கூறி தனது விசாரணையை முடித்தது” என்று அந்த பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாந்தி தேவி அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் 1987ம் ஆண்டு 27, டிசம்பர் அன்று இறந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 2 வயதில் திருமணம்..13 வயதில் விதவை: நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்
» 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய மாணவன்
» 102 வயதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum