Top posting users this month
No user |
Similar topics
குழந்தை பெற்று மீண்டும் பள்ளிக்கு செல்வேன்: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி நம்பிக்கை
Page 1 of 1

அரியானாவில் பலாத்காரத்தால் பாதிக்கபட்ட 12 வயது சிறுமி ஒருவர், குழந்தை பெற்று மீண்டும் பள்ளிக்கு செல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் கெய்தல் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 12-வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சிறுமிக்கு தந்தை இல்லாத நிலையில், தாயார் ஒரு பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் சுருண்டுள்ளார். தாயார் என்னவென்று கேட்டபோது அவர் பதில் ஏதும் கூறவில்லை.
பின்னர் சில நாட்களுக்கு பிறகு சிறுமி உடை மாற்றும் போது அவரது வயிற்று பகுதி பெரிதாக இருந்ததை தாயார் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் கடுமையாக விசாரித்தபோது, சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.
கடந்த யூலை மாதம் ஒரு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் கூறியதை அடுத்து தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், மகளின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, இது மிகவும் தாமதமாகி விட்டது என கூறி நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
அரியானா நீதிமன்றம் சிறுமியின் பிரசவ மற்றும் மருத்துவ செலவுகளை மாநில அரசு ஏற்று கொள்ள உத்தரவிட்டுள்ளது.
விசாரணையில், இந்த வழக்கின் குற்றவாளி கெய்தால் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
குற்றவாளியை பொலிசார் தற்போது கைது செய்துள்ள நிலையில், குற்றவாளியின் தந்தை தனது மகனுக்கு 17 வயது தான் ஆகிறது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆனால் பொலிசார் அந்த நபருக்கு 22 வயது ஆகிறது என நம்புகின்றனர்.
இந்நிலையில் அந்த சிறுமி, நான் குழந்தை பிறந்து நன்றாக ஆனதும் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
சிறுமியின் தாயார் கூறுகையில், எனது மகள் பள்ளியில் நன்றாக படிக்க கூடியவள், அவளுக்கு விளையாட்டிலும் நடனம் ஆடுவதிலும் விருப்பம் அதிகம்.
மேலும், எனது மகள் எப்படியும் 8ம் வகுப்புக்கு உரியை தேர்வினை எழுதி வெற்றி பெறுவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்
» பலாத்காரத்தால் குழந்தை பெற்ற பெண்: கணவனிடம் பத்தினிதன்மையை நிரூபிக்க நூதன தீர்ப்பு
» டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum