Top posting users this month
No user |
Similar topics
கிழ. அழகியற் கற்கைகள் பீட மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
Page 1 of 1

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஏனைய பிரிவு மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
“இது பல்கலைக்கழகமா? பள்ளிக்கூடமா”, “எங்கே?எங்கே?சுற்றுலாக்கான நிதி எங்கே”, “போராட்டம் இது போராட்டம் எமது உரிமைக்கான போராட்டம்”;, “யாருக்கு யாருக்கு இராஜதுரை அரங்கு யாருக்கு” போன்ற சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மூன்றாம் வருட மாணவர்களது கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுகின்றமையும் அது குறித்து நிர்வாகிகள் எவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நிறுவகத்தில் பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளவர்கள் தங்களது தொழில் கடமைகளை மீறி மாணவர்களிடம் அதிகாரத்தினை பிரயோகிக்கின்றனர்.
அத்துடன் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கானது பரீட்சைக்காலத்தில் வெளிநிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரையாண்டு பரீட்சைக்கான நேர அட்டவணைக்கமைய உரிய நேரத்திற்கு நடைபெறாது பிற்போடப்படுவதுடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதப்போக்கே நிலவிவருகின்றது என தெரிவித்த மாணவர்கள்,
இது தொடர்பில் கடந்த காலத்தில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும் நிர்வாகத்துறை அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
» திருமலையில் தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
» யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum