Top posting users this month
No user |
Similar topics
தப்பு செய்தவர்களுக்கு தண்டனை தரும் மிளகாய் அரைத்து பூசும் வழிபாடு
Page 1 of 1

மாசாணி அம்மன் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் மிகவும் வித்தியாசமான வழிபாடு, நீதிக்கல்லில் வத்தல் அரைத்து பூசும் வழிபாடாகும். கோவில் உள்ளே இந்த நீதிக்கல் உள்ளது. அம்மனுக்கு வலது புறத்தில் கிழக்கு திசைப் பார்த்து இந்த நீதி தேவதை சிலை உள்ளது. இந்த நீதி தேவதை உருவம் 4 முகம் கொண்டது.
மார்புக்கு மேல் மனித உருவமாகவும், மார்புக்கு கீழ் பாம்பு உருவமாகவும் நீதி தேவதை சிலை அமைப்பு உள்ளது. நீதி தேவதையின் கைகள் கும்பிட்ட வண்ணம் இருக்கிறது. பகைவர்களாலும், கள்வர்களாலும், மற்றவர்களாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
பில்லி, சூனியம், மந்திரம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், பொருட்களைத் திருட்டுக் கொடுத்தவர்களும், கடையில் மிளகாய் வற்றலை வாங்கி நீதிக்கல்லின் அருகிலிருக்கும் உரலில் அரைத்து நீதிக்கல்லில் முழுவதும் பரவும்படி தேய்த்து தாங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தை முறையிட்டால் தவறு செய்தவர்களை மாசாணியம்மன் மூன்று அமாவாசைக்குள் தண்டித்து விடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.
தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை மாசாணி அம்மனிடம் கூற வருபவர்கள் கடையில் மிளகாய் வற்றலை வாங்கி வரவேண்டும். இந்த வழிபாட்டுக்காகவே 100 கிராம், 250 கிராம் பாக்கெட்டுகளில் மிளகாய் வற்றல் விற்கிறார்கள். அவற்றை கோவில் உள்ளே பக்தர்கள் வரிசையாக செல்லும் பகுதியில் இருக்கும். உரலில் ஆட்டி அருகில் நிற்கும் நீதிக்கல்லில் முழுவதும் தேய்த்து தாங்கள் பாதிக்கப்பட்ட விபரத்தை முறையிட வேண்டும்.
வற்றல் தூளை இரண்டு கைகளிலும் எடுத்து நீதிக்கல்லின் உச்சியில் இருந்து கீழே வரை மூன்று தடவை தடவி விட வேண்டும். இந்த வழிபாட்டை செய்தால் தவறு செய்தவர்களை மூன்று அமாவாசைக்குள் மாசாணி தண்டித்து விடுவாள். இந்த முறை வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத ஒன்று. யாரைக்குறித்து மிளகாய் அரைத்து நீதிக்கல்லில் தடவப்பட்டதோ அவர்கள் உடலும் தலையில் தகிர்த்து தண்டனை அடைவார்கள்.
திருடுபோன பொருள் திரும்பக் கிடைத்தாலோ, தங்களை வஞ்சித்தவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் தண்டனை கிடைத்துவிட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் உணரும் போதோ யாரைக் குறித்து மிளகாய் நீதிக்கல்லில் தடவப்பட்டதோ அவர்களுக்குத் தண்டனை கிடைத்து விட்டதாக நம்பும்போதோ அவ்வம்மனைக் குளிரவைக்க நல்லெண்ணெய்க் காப்பு செய்கிறார்கள்.
இதைத் தவறாது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைக்காமல் கோயிலில் கொடுத்துவிட்டு எந்த விதமான பிரசாதங்களும் வாங்கமால் சென்று விடுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கை, வேண்டுதல்கள் நிறைவேறிய பின் அம்மனை வழிபட்டு பிரசாதங்களை வாங்குகிறார்கள்.
இவ்வழக்கம் ‘‘அம்மன் வழிபாடு ஆரம்பித்த நாட்கள் முதல் தொடர்ந்து வருகிறது. நாள்தோறும் ஒன்பது அல்லது பத்து நபர்களுக்கு மேல் மிளகாய் அரைக்கிறார்கள். அமாவாசை நாட்களில் 100 பேர்களுக்கு மேல் மிளகாய் அரைப்பதாக’’ கோவிலில் சீட்டுக் கொடுப்பவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை தரும் மிளகாய் அரைத்து பூசும் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum