Top posting users this month
No user |
பா.உ. களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் கலப்பு தேர்தல் முறையை கொண்டுவர சு.க. நடவடிக்கை
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள முதற்கட்ட தேர்தல் முறை மாற்ற யோசனை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இது தொடர்பில் தொடர்ந்து ஆராயும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நால்வர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தலைமை தாங்குவதுடன் மஹிந்த சமரசிங்க டிலான் பெரெரா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.
மேலும் நிமால் சிறிபால டி. சில்வா தலைமையிலான இந்தக் குழுவானது கடந்தவாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து அதன்படி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 260 ஆக அதிகரிக்கவும் விகிதாசார மற்றும் தொகுதிமுறை அடங்கிய கலப்பு தேர்தல் முறைக்கு செல்லவும் சுதந்திரக் கட்சி விருப்பம் கொண்டுள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் 160 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. அந்த எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவராமல் தேர்தல் முறையை மாற்றுவதென்றால் விரைவாக செய்ய முடியும் என்றும் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அதற்கு காலம் தேவை என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளமையின் காரணமாக புதிய தேர்தல் முறை யோசனையை உருவாக்கும் செயற்பாடுகள் கட்சிகள் மட்டத்தில் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்பது தொடர்பில் நேற்று சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் முக்கிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum