Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவின் தேசிய விலங்கு: புலிக்கு பதில் சிங்கமா?
Page 1 of 1

இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கத்தை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தேசிய விலங்கு என்ற அந்தஸ்து புலிக்கு கடந்த 1972ம் ஆண்டு வழங்கப்பட்டது.
நாட்டில் புலிகள் இனம் அழிந்து வருவதை தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. இதோடு புலிகள் காப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் மட்டுமே தற்போது சிங்கங்கள் உள்ளது. இந்நிலையில், தேசிய விலங்காக சிங்கத்தை அறிவிக்க முயற்சி செய்வது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கும் பரிந்துரையை ஜார்கண்டைச் சேர்ந்த எம்பியும், தொழில் அதிபருமான பரிமல் நத்வானி மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த பரிந்துரை தேசிய வன விலங்கு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றும் ஆய்வு செய்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. பின்னர் இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று நிலைக்குழு குறிப்பிட்டதாக தேசிய வன விலங்கு வாரிய உறுப்பினர் ராமன் சுகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயில் 2200 புலிகளும், 411 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
எனவே விரைவில் சிங்கம் தேசிய விலங்கு அந்தஸ்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum