Top posting users this month
No user |
உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதம் விற்ற மகிந்தவின் மைத்துனர் பற்றிய புதிய தகவல்
Page 1 of 1

உக்ரைனில் மோதலில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தகவல் வெளியான பின்னர் தலைமறைவாகியுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க பற்றிய புதிய தகவல்கள் வெளியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான உதயங்க, ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது ஆயுத முகவர்கள் சிலருடன் இலங்கை வந்துள்ளார்.
உதயங்க இலங்கைக்கு அழைத்து வந்த ஆயுத முகவர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உதயங்கவுடன் வந்த மூன்று ஆயுத விற்பனை முகவர்கள், ஜெட் விமானம் ஒன்றில் 6 பாரிய ஆயுத பெட்டிகளை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளனர்.
ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் மற்றும் விமான நிலையத்தின் எந்த ஆவணங்களிலும் பதிவு செய்யாது, ஆயுதங்கள், கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் அவரது ஆயுத விநியோக குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுத விற்பனை முகவர்கள் வந்த ஜெட் விமானத்திலேயே உதயங்க வீரதுங்கவும் இலங்கை வந்துள்ளார். உதயங்க மற்றும் ஆயுத விற்பனை முகவர்கள் கலந்துரையாடுவது சம்பந்தமான புகைப்படங்களே தற்போது வெளியாகியுள்ளன.
அதேவேளை உதயங்க வீரதுங்கவுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயேல் ரணவீரவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் கூறுவதால், சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நக்சலைட் போராளிகளுக்கு தேவையான ஆயுதங்கள், விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், இலங்கை ஊடாக இலகுவாக கிடைத்து வருவது குறித்து கிடைத்துள்ள தகவல் பற்றி இந்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனை இணைத்து கொண்டு, கோத்தபாய ராஜபக்ச ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum