Top posting users this month
No user |
Similar topics
நாட்டில் தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்தினால் மலையக மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும்: கணபதி கனகராஜ்
Page 1 of 1

தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யாமல் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு சென்றால் மலையக மக்களின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விகிதாசார தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இன்னொரு குறைபாடுடைய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, அதை மக்களிடையே திணிக்க முற்படுவது முறையற்றது.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு,அதனால் தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் தேசிய ரீதியிலான முடிவுகள் சகல தேசிய இனங்களினதும் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.
இதற்காக புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சிறுபான்மை மக்களின் ஆதரவு பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் கடைசியாக 1974ம் ஆண்டு நோயல் தித்தவெல ஆணைக்குழுவினால் தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போது, இந்திய வம்சாவளி மக்கள் பல தொகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் எந்தவொரு தொகுதியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யக் கூடிய அளவிற்கு வாக்கு பலத்தை கொண்டிருக்கவில்லை.
ஆனால் அந்த காலப்பகுதியில் நுவரெலியா தேர்தல் தொகுதியும், மஸ்கெலியா தேர்தல் தொகுதியும் வெவ்வேறு தேர்தல் தொகுதிகளாக இருந்தன. இவ்விரண்டு தொகுதிகளையும் இணைத்தால் சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்குகள் இருந்தன.
அதனால் இந்த இரண்டு தொகுதிகளையும் இணைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு வழியேற்படுத்தும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் பயனாக நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதி மூன்று உறுப்பினர் கொண்ட தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் குறைவாக இருந்த அந்த காலக்கட்டத்தில் நேயன் தித்தவெல ஆணைக்குழுவின் இந்த தீர்மானம் மிக பொருத்தமானதாகவே இருந்தது.
ஆனால் தற்போது மூன்று இலட்சம் வாக்குகளை அண்மித்துவிட்ட இந்திய வம்சாவளி மக்கள், 2015ம் ஆண்டில் அதே மூன்று உறுப்பினர்கள் கொண்ட தொகுதிக்குள் நுவரெலியா மாவட்ட இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த முனைவது மாற்றத்தை விரும்பிய தமிழ் மக்களுக்கு அநியாயத்தை பரிசாக வழங்கும் நடவடிக்கைக்கு சமனானது.
இந்த பிரேரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கமாட்டார் என உறுதியாக நம்புகின்றோம். அதே போல பதுளை, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் தொகுதிகளை உருவாக்க கூடிய அளவிற்கு இந்திய வம்சாவளி மக்களின் வாக்கு பலமும், பரம்பலும் அமைந்துள்ளது.
ஆனால் 160 இற்கு அதிகமான தேர்தல் தொகுதிகளை உருவாக்க முடியாது என கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தை பெரும்பான்மை கட்சிகள் முன்வைக்கின்றன. 160 தொகுதிகள் என்பது வேதமோ, பைபிலோ அல்லது அல்குரானோ கிடையாது.
1974ம் ஆண்டிற்கு பின்பு தான் இந்திய வம்சாவளி மக்களின் பறிக்கப்பட்ட குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டு அந்த மக்கள் வாக்காளர் பட்டியலில் உட்புகுத்தப்பட்டனர்.
எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலை தொகுதிவாரியாக நடத்த கோருபவர்கள் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை குறித்து விசேடமாக கவனம் செலுத்தி புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்க புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும்.
சிறுபாண்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தற்போது திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் தொகுதி முறையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய சகல வழிகளையும் ஆராயவேண்டிய நிலை ஏற்படும்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் விரிவாக கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்
» தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
» தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum