Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமண தடைநீக்கும் திருவீழிமலை கோவில்

Go down

திருமண தடைநீக்கும் திருவீழிமலை கோவில் Empty திருமண தடைநீக்கும் திருவீழிமலை கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:43 pm

திருவாடுதுறை ஆதீனத்திற்க்கு சொந்தமான திருவீழிமலை அழகிய மாமுலையம்மை உடனாய வீழிநாதர் கோயில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கர் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இந்தக்கோயிலில் உள்ள படிக்காசு விநாயகர், முருகன், அம்பிகை மீது பாடப்பெற்ற பதிகங்ளும் உள்ளன. திருமணத்தடை ஏற்பட்டு திருமணம் நடைபெறாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்தடை நீங்க இங்கு எழுந்தருளி இருக்கும் மணவாளகரை(மாப்பிள்ளை சுவாமி)வந்து வழிபட திருமணத்தடைகள் நீங்கி திருமணங்கள் நடைபெறுகிறது.

ஆதலால் மக்கள் மிகுதியாக இந்தக்கோயிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இத்தலத்தில் சுலேதுவிற்காக எமனை வீழிநாதர் காலால் உதைத்து சிரஞ்சீவியாய் வாழ அருள் செய்தார். அதனால் இத்தலம் எமபயம் நீக்கும் தலமாகும். ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து வழிப்பட்டு திருஞானசம்பந்தர் பாடிய “வாசி தீரவே காசு நல்குவீர்’ என்னும் பதிகத்தை பாராயணம் செய்து வழிபட வறுமை நீங்கும் எனபர்.

சுந்தரருக்கு ஆபரணங்கள் வழங்கியதால் ஆபரணங்கள் வேண்டுவோரும் இங்கு வந்து வழிபட நினைத்ததை பெறுவதாக தலப்புராணம் கூறுகிறது.

ஸ்தல வரலாறு:

காத்தியான முனிவர் என்பவர் இத்தலத்தில் தவச்சாலை அமைத்து குழந்தைவரம் வேண்டி வீழிநாதரையும், அம்பிகையும் நினைத்து கடும் தவம் இருந்தார். அப்போது அம்பிகை அவர்முன் தோன்றி காட்சியளித்து நீர் விரும்பிய வரம் என்ன என்று கேட்டாள். முனிவர் மகிழ்ந்து தாயே ‘ நீயே எனக்கு மகளாக வரவேண்டும் என்றார். அவருக்கு அம்பிகை அந்த வரத்தை அளித்தாள்.

முனிவர் தவம் புரிந்த இடம் அருகே தீர்த்தக்குளத்தில் நீலோற்ப மலரில் அழகிய பெண்குழந்தையாக தோன்றினாள். அழகே வடிவாக திகழ்ந்த அந்தக்குழந்தையை முனிவரின் மனைவி எடுத்து கார்த்தியானி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கார்த்தியானிக்கு உரிய மணப்பருவம் வருவதை அறிந்த முனிவர் பரமேசுவரனை குறித்து தவம் புரிந்தார்.

இறைவன் முனிவர் முன் தோன்றினார். இறைவனைகண்ட முனிவர் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தனது மகளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார். பரமேஸ்வரனும் மணம் மகிழ்ந்து சித்திரை மாதம் மகநட்சத்திரத்த்ன்று திருமணம் செய்வோம் என்று கூறினார்.

இறைவன் முனிவருக்கு வாக்களித்தப்படி சித்திரை மாதத்தில் மகநட்சத்திரத்தன்று கயிலாயத்தில் இருந்து எழுந்தருளி திருமால், பிரம்மா, நந்தி முதலியகணங்கள் புடைசுழ திருவீழிமழலையில் காத்தியாயன முனிவர் இருக்கும் இடம் அடைந்தார். அங்கு சிவபொருமானுக்கும், கார்த்தியானி அம்மைக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது காத்தியாயன முனிவருக்கு மாப்பிள்ளையாக வந்தவர் பரமன் தானா என்று சந்தேகம் ஏற்பட்டது. அதனை அறிந்த இறைவன் முனிவரின் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு முன்னே திருமால் தாமரைப்பூவிற்குப் பதிலாக அர்ப்பணம் செய்த கண்மலரும், மிழலைக்குறும்பர் என்ற பக்தர் நிவேதனம் செய்த விளாங்கனியும் ஜோதி வடிவமாக இருந்த பரமன் திருவடிகளில் வந்து வீழ்ந்தன.

முனிவருக்கு சந்தேகம் தீர்ந்தது. பின்பு காத்தியாயன முனிவர், திருமால், பிரமன் முதலியோர் இந்த திருமணக்கோலத்தோடு என்றும் வந்திருந்து அருள் புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தனர். அவர்கள் விரும்பிய படி மணக்கோலத்துடன் இறைவன் காட்சியளித்தார்.

உமையம்மை இறைவனை திருமணம் புரிந்து கொள்ள தவம் இருந்து தம் எண்ணம் நிறைவேறிய தலம் ஆதலால் திருமணம் ஆகாதபெண்கள் இத்தலத்திற்கு வந்து கல்யாண சுந்தரேசுவருக்கு மாலை அனிவித்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து தொடர்ந்து 45 நாட்கள் காலையில் நீராடி கல்யாணசுந்தரேசுவரை வணங்கி வழிப்பட்டால் திருமணம் கைகூடும் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

மன்மதனுக்கு உயிர் வழ்ங்கிய தலம்:

பரம்சிவனின் கோபத்திற்க்கு ஆளாகி சாம்பலான மன்மதன் ரதிதேவியின் தவத்தினை ஏற்றுக்கொண்ட சிவன் இத்தலத்தில் மன்மதனுக்கு உயிர் கொடுத்தார். இக்கோயில் அருகில் திருஞ்ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இருமடங்களில் தங்கி இருந்து அடியார்களுக்கு அறுசுவை உணவு வழங்கி வந்தனர். அப்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பரமேஸ்வரன் இருவருக்கும் நாள் தோறும் ஒரு பொற்காசு வழங்கினார். அந்தகாசுமுலம் கிடைத்த வருமானத்தில் அடியார்களுக்கு உணவு வழங்கினார்.

செல்லும் வழி:

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு செல்லும் இருப்புப் பாதையில் உள்ள பூந்தோட்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 10கி. மீட்டர் தூரத்தில்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum