Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொடுங்குன்ற நாதர் கோவில்

Go down

கொடுங்குன்ற நாதர் கோவில்              Empty கொடுங்குன்ற நாதர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:38 pm

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த, வாழ்ந்த ஊர் இது. இந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை என்ற இடத்தில் ஊராகும். இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவில் 1000 வருடங்களுக்கு மேல் மிகப்பழமையானது. தேவாரம் பாடல்பெற்ற தலங்களில் இது ஐந்தாவது ஸ்தலமாகும்.

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார். அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது.

தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. இந்த கோயில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.

மூன்றடுக்கு சிவன் கோயில்:

ஒரு முறை வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி எழுந்தவுடன். ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொண்டு உட்கார வேண்டும், அதை வாயு பகவான் தனது காற்றின் பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டியாக வைக்கப்பட்டது. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார்.

வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைத்து பார்க்கவே முடியவில்லை. இந்த போட்டியின் போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கு மலையாக இருக்கிறது. இம்மலையில் சிவபெருமான் பூலோகம், பாதாளம், கைலாயம் என மூன்று விதமான இடங்களில் இருப்பது போல் இங்கு காட்சி தருகிறார்.

பாதாளத்திலுள்ள கோயிலில்தான் ஸ்தலத்தின் நாதரான, கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். அம்பாள், குயிலமுதநாயகி என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர் காட்சி தருகிறார். மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகர் என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார்.

கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறை கோவிலாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், "அந்நியோன்ய கோலம்' என்கிறார்கள். மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும்.

எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர்.குறிஞ்சி நிலமான குன்றில் அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை மட்டுமே நைவேத்யமாக படைக்கின்றனர். இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது.

சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என கூறப்படுகிறது. மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது. கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யும்போது, சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான மூலிகை மருந்துகளை வைப்பது வழக்கமாக உள்ளது.

மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை, மீண்டும் அணிவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். பூஜையின்போது 16 முழத்தில் வேஷ்டி மற்றும் துண்டும், அம்பாளுக்கு 16 முழ புடவையும் அணிவித்து அலங்கரிக்கிறார்கள்.

இந்த சிவன், கையில் 4 வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு, "வேதசிவன்' என்றும் பெயருண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள், இவருக்கு வெள்ளை நிற மலர் மாலை சாத்தி, வெண்ணிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில் தெட்சிணாயண புண்ணிய காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களிலும், உத்தராயண புண்ணிய காலம் தொடங்கிய முதல் மூன்று மாதங்களும் என தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது.

இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனத்தின் மூலம் காட்சி கொடுத்ததாக ஐதீகம். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த முருகன், வயோதிக கோலத்தில் இங்கு காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. முருகன் சன்னதி எதிரில், 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.

தைப்பூசத்தன்று முருகன், இக்கோயிலிலிருந்து சற்று தூரத்திலுள்ள பாலாறு தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி உற்சவம் காண்கிறார். முருகன், பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக, இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முருகன் தோஷம் நீங்கப்பெற்றார்.

இக்கோயிலில், "குஷ்ட விலக்கி சுனை' என்ற தீர்த்தமும் இருக்கிறது. நாள்பட்ட வியாதி, தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. வேதாரண்யம் தலத்தில் சிவனை தரிசித்து ஞானசம்பந்தர் இவ்வழியாக வந்தபோது, வரும் வழியில் தூரத்திலிருந்து அவர் மலையைக் இம்மலையை கண்டார், சிவன் மலையின் வடிவில் ஞானசம்பந்தருக்கு காட்சி தந்தார். மகிழ்ந்த சம்பந்தர், மலையாகக் காட்சி தந்த சுவாமியை, "எம்பிரான் மலை எனச்சொல்லி பதிகம் பாடினார்.

எனவே இந்த ஸ்தலம், எம்பிரான்மலை என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இப்பெயரே, "பிரான்மலை' என மருவியது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, ஆட்சி செய்த தலம் இது. இம்மன்னன் இக்கோயிலுக்கு அதிகமாக திருப்பணி செய்துள்ளார். சித்திரை மாத பிரம்மோற்ஸவத்தின்போது இவருக்காக, "பாரி உற்சவம்' என ஒருநாள் விழா எடுக்கிறார்கள்.

அன்று, "முல்லைக்கு மன்னன் பாரி தேர் கொடுத்த வைபவம்' சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பாரி, ஒரு தேரில் பரம்புமலை அடிவாரத்திற்கு செல்வார். அங்கு முல்லைச்செடிக்கு அருகில் தேரை நிறுத்திவிட்டு, தனியே கோயிலுக்குத் திரும்பிவிடுவார். இன்னும் எண்ணற்ற அற்புதங்களை இக்கோவில் கொண்டுள்ளது. இந்த கோவில் சென்று வரும்போது மனம் மிகவும் பரவசமாக இருக்கும் என்பது உண்மை.

செல்லும் வழி:

சென்னையில் இருந்து செல்பவர்கள் மதுரை சென்று அங்கிருந்து மேலூர் செல்ல வேண்டும் அங்கிருந்து மிகவும் அருகில் உள்ள சிங்கம்புணரி சென்று பிரான்மலைக்கு செல்ல வேண்டும். அடிக்கடி இந்த வழித்தடங்களில் பேருந்து வசதி உண்டு. காரைக்குடி பகுதி அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் காரைக்குடி சென்று அங்கிருந்து பழனி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகளில் சென்றால் சிங்கம்புணரி இறங்கி பிரான்மலை செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum