Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வினைகளை தகர்த்தெறியும் விஸ்வாமித்திரர் கோவில் விஜயாபதி

Go down

வினைகளை தகர்த்தெறியும் விஸ்வாமித்திரர் கோவில் விஜயாபதி Empty வினைகளை தகர்த்தெறியும் விஸ்வாமித்திரர் கோவில் விஜயாபதி

Post by oviya Sat Apr 18, 2015 3:35 pm

புராணங்களில் வரும் விஸ்வாமித்திர மகரிஷிக்கு கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி என்ற கிராமத்தில் விஸ்வாமித்திரர் என்ற கோவில் அமைந்துள்ளது. சகல பாவங்களையும் போக்கும் ஸ்தலமாகவும், தீராத பிரச்சினைகள் தீர்க்கும் ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

அமைதியான சூழ்நிலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. விஸ்வாமித்திர மஹரிஷி தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி இறைவனைக்கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்ரி மந்திரத்தை நமக்கு அருளியவர். கர்மாவை மாற்றும் சக்தியுள்ளவர் விஸ்வாமித்திரர்.

இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், இறைவனுக்குப் போட்டியாக சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முற்றிலும் இழந்த விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.

இங்கு தனது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய ராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்தார் விஸ்வாமித்திரர்.

இந்த இடம் அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் இதுவாகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார்.

மேலும், தவத்தின்போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இதன் மூலம் தன் இழந்த சக்தி மற்றும் பிரம்மரிஷி பட்டத்தை பெற்றார். தசரதனின் குருநாதர் வசிஷ்ட மஹரிஷி விஷ்வாமித்திர மகரிஷியின் எதிரி போன்றவர்.

விஷ்வா மித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதை விரும்பாதவர் ஆவார்.

இந்த வசிஷ்ட மகரிஷியானவர் சீதை இருவரால் கவர்ந்து செல்லப்பட வேண்டும் என்று விதி உள்ளது. எனவே ராமனுக்கு சீதையை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறினார். ஆனால் இந்த தடையை மீறி விஷ்வாமித்திரரின் அருளால் ராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடிக்கச் சென்றார்.

திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர விஷ்வாமித்திரரும் சென்றார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் விஷ்வாமித்திரரை அவமானப்படுத்தக் காத்திருந்த வசிஷ்டர் தசரதனின் துணையுடன் ராமன் திருமணத்தை நடத்தினார். தன்னுடைய குரு விஷ்வாமித்திரர் தான் திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என்று சபையில் எடுத்துக்கூறாமல் ராமன் மவுனம் காத்தார்.

இதனால் குருவின் மன வருத்தத்திற்கு ஆளானார். இதனால் ராமன், சீதா திருமண வாழ்க்கையில் துன்பமும், போராட்டமும் நிறைந்ததாக அமைந்தது. இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவென்றால் தாய், தந்தையை விட குருவே மேலானவர் ஆவார் என்பதை உணர வேண்டும். இதன் மூலம் குருவின் மனவருத்தம் நமக்கு கிடைக்காது. இங்கு விஸ்வாமித்திர மஹரிஷியின் சூட்சும சமாதியும் தில்லைக்காளி கோவிலும் உள்ளது.

இக்கோவிலில் நடத்தப்படும் நவ அபிஷேக பரிகார பூஜையில் நமது 64 விதமான தோஷங்கள் தீர்க்கப்படுகிறது. பல ஜென்ம பாவங்களும் தீர்க்கப்படுகிறது. இங்கு நீராடி இங்குள்ள சிவன், வினாயகர், முருகன், காளி, விஸ்வாமித்திரரை வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையாத நம் வீட்டின் கன்னி தெய்வங்கள் போன்றோரின் ஆத்மா சாந்தியடையும்.

கட்டாயம் நமக்கு நேரம் கிடைக்கும் முறையெல்லாம் இங்குள்ள கடலில் குளித்து விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

மூன்று பெளர்ணமிக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, தோஷங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum