Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எப்படிப்பட்ட துயரத்தையும் நீக்கும் மஹான் சதாசிவ பிரம்மேந்திரர் கோவில்

Go down

எப்படிப்பட்ட துயரத்தையும் நீக்கும் மஹான் சதாசிவ பிரம்மேந்திரர் கோவில் Empty எப்படிப்பட்ட துயரத்தையும் நீக்கும் மஹான் சதாசிவ பிரம்மேந்திரர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:29 pm

கோவில் வரலாறு :

கரூரில் இருந்து 10 கிமீ தொலைவில் காவிரிக்கரை ஒரம் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் நெரூர். இங்கு உள்ள காசிவிஸ்வனாதர் கோவிலும் அதனுள்ளே இருக்கும் மஹான் சதாசிவபிரம்மேந்திரரின் ஜீவசமாதியும் மிக பிரசித்திபெற்றது.

கொங்கு நாடுகளில் உள்ள ஜீவசமாதிகளில் மிக அளப்பறிய சக்திவாய்ந்தது பிரம்மேந்திரரின் ஜீவசமாதி. பல அற்புதங்களை செய்து மக்களை துயரில் இருந்து காப்பாற்றிய மஹான் சதாசிவபிரம்மேந்திரர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இவர் மறைந்த பிறகே அந்த இடத்தில் சுயம்புவாக லிங்கம் தோன்றி காசிவிஸ்வனாதர் கோவிலாக இன்று உள்ளது.

பிரம்மேந்திரரின் அற்புதங்கள் :

மஹான் சதாசிவபிரம்மேந்திரர் 17-18ம் நூற்றாண்டுகளில் மதுரையில் ஒரு பிராமணகுடும்பத்தில் அவதரித்தவர் தந்தையார் பெயர் சோமதான அவதானியார், தாயார் பெயர் பார்வதி அம்மையார், திருவிசலூர் மஹா வித்வானிடம் வேதாந்த பாடம் பயின்றார். ஞானகுருவை நாடிய சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமசிவந்திரசுவாமிகளிடம் சேர்ந்தார்.

சிவராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரையுடைய மஹான், காஞ்சி காமகோடி பீடாதிபதி சுவாமிகளால் பிரம்மேந்திரர் என பெயர் சூட்டப்பட்டார். இவரின் திறமையை அறிந்த மைசூர் மஹாராஜா தனது ஆஸ்தான வித்வானாக்கி வைத்துக்கொண்டார். இவரின் வாதத்திறமையும் அறிவும் அனைவரையும் வியக்கவைத்தது மிகப்பெரும் அறிஞர்களை தனது வாதத்திறமையால் தோற்கடித்தார்.

ஒரு முறை இவரின் குரு நாதர் காஞ்சி பரமசிவந்திர சுவாமிகள் அதிகமாக எல்லோரையும் பேசுகிறாயே உனக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை என கூறினார். அன்றுமுதல் யாரிடமும் வாதம் புரியாமல் மெளனகுருவாக வாழத்தொடங்கினார். அமைதியை விரும்பிய மஹான் இறுதியில் வந்து சேர்ந்த இடம் பழமையான அக்னீஸ்வரர் கோவில் உள்ள நெரூரும் அதன் அருகேயுள்ள காவிரிக்கரையும்தான்.

இங்கு பல அற்புதங்களை புரிந்தவர். இவர் உடல் மனம் என்ற உணர்வின்றி ஆடையின்றி திகம்பரராய் திரிந்தவர். காவிரிக்கரையோரம் விளையாடும் சிறுவர் சிறுமிகளை கூப்பிட்டு மதுரையில் நடக்கும் சித்திரைதிருவிழாவை தன் கையிலேயே காண்பித்து குழந்தைகளை மகிழ்விப்பாராம்.

ஒருமுறை ஆடையின்றி திகம்பரராய் ஒரு அரண்மனையில் நுழைந்துவிட்டாராம் அங்கிருந்த மன்னன் சட்டென வாளை எடுத்து யாரோ நுழைந்துவிட்டானே என நினைத்து கையை வெட்டிவிட உடல் மன உணர்வில்லாத பிரம்மேந்திரர் கை வெட்டுப்பட்டு கீழே விழுந்தும் உணர்வில்லாமல் கடந்து சென்றதை நினைத்து மன்னர் ஆச்சரியப்பட்டார்.

தவறாக ஒரு மஹானை வெட்டிவிட்டோமே என அவரிடம் மன்னிப்புகோரினார். இவர் உடல் மன உணர்வின்றி இருந்ததற்கு இன்னொரு உதாரணம் ஒரு முறை காவிரிக்கரையில் கடும் வெள்ளம் வந்தது. ஊர் மக்கள் மணல் மூடைகளையும் மணலையும் கரை ஓரம் சேர்த்தனர் அப்போது அங்கு மெளன நிலையில் உட்கார்ந்து இருந்த பிரம்மேந்திரரின் மேல் மணலை போட்டு தெரியாமல் மூடிவிட்டனர்.

மக்களும் இவரைத்தேடவில்லை நீண்ட நாட்கள் கழித்து பராமரிப்புக்காக மணலைத்தோண்டும்போது எப்படி தியான நிலையில் உட்கார்ந்து இருந்தாரோ அதே போலவே அப்படியே உட்கார்ந்து இருந்ததை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். இதன் பின் பிரம்மேந்திரரின் ஞானத்தையும் அவரின் அற்புதங்களையும் ஊர் மக்கள் புரிந்து கொண்டனர்.

ஒரு சமயம் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைவனக்காட்டில் சதாசிவர் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் சமயபுரம் வருவதாய் வேண்டிக்கொள்ள நீ ஏன் சமயபுரம் வருகிறாய் இங்கேயே நான் புன்னைவனக்காட்டில் இருக்கிறேனே அங்கேயே ஒரு கோவில் கட்டிவழிபட சொல்லி மன்னர் கனவில் அம்மன் கூறியது.

அங்கே வந்த மன்னர் கோவிலைக்காணாமல் வெறும் புற்றுமட்டும் இருப்பதை கண்டு திகைத்து நின்றார். அருகே நிஷ்டையில் இருந்த பிரமேந்திரரிடம் கனவின் விவரத்தைக்கூறினார். விஷயத்தை புரிந்துகொண்ட பிரம்மேந்திரர் அங்கு இருந்த புற்றுமண்ணை அம்மனாக மாற்றினார் புனுகு, ஜவ்வாது அனைத்தையும் கலந்து அம்மனை உருவாக்கினார் ஜன ஆகர்ஷண யந்திரத்தை எழுதி அங்கு வைத்தார்.

அவர் உருவாக்கிய அந்தக்கோவிலே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலாக இன்றளவும் தஞ்சையில் புகழ்பெற்று விளங்குகிறது. இதேபோல புதுக்கோட்டை மன்னருக்கு இவர் தன் கையால் மணலில் மந்திரம் எழுதி அவரின் துயரத்தை போக்கினார். அந்த மணல் மந்திர மணலாக இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

இவர் இறந்த சிறிது நாட்களில் தான் சமாதியடையும் இடத்தின் அருகே ஒரு சுயம்புலிங்கம் தோன்றும் என உணர்த்திவிட்டு சென்றார். அதுபோலவே அந்த இடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது அவர் சமாதியடைந்த இடத்திலேயே சுயம்புவாக தோன்றிய லிங்கம் காசி விஸ்வ நாதராக அம்பாளுடன் காட்சியளிக்கிறது.

இவர் ஜீவசமாதியில் உட்கார்ந்து தியானம் செய்யும்போது எப்படிப்பட்ட துயரங்களும் தீர்ந்துவிடும் மன அமைதி பெறும் என்பது சென்றவர்களின் கருத்து. எண்ணற்ற அற்புதங்களை புரிந்த மஹான் உடல் ரீதியாக நெரூரில் சமாதியடைந்து, ஆவி ரூபமாக பாகிஸ்தான் கராச்சியிலும், மானாமதுரையில் உள்ள ஆனந்த வல்லியம்மன் கோவில் உட்பட மூன்று இடங்களில் சமாதியடைந்துள்ளார்.

இன்றளவும் சமாதியில் இருந்து ஜீவனுடன் அருள்பாலித்து கொண்டிருப்பதாக நம்பப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், சித்ரா பெளர்ணமி, மற்றும் வைகாசி மாதம் சுத்த பஞ்சமி தொடங்கி தசமி வரை சிறப்பாக விசேஷங்கள் ஆராதனை நடக்கிறது. கண்டிப்பாக துயரங்களை மாற்றும் கோவில் ஜீவசமாதி என்பதால் மக்கள் கூட்டம் அளவில்லாமல் வந்துகொண்டிருக்கிறது.

கோவிலுக்கு செல்லும் வழி:

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் 4 ம் நம்பர் பேருந்தில் ஏறி சதாசிவம் கோவில் செல்லவேண்டும் என்றால் அங்கிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பிரம்மேந்திரர் கோவிலுக்கு செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum