Top posting users this month
No user |
வேண்டும் வரம் அருளும் தஞ்சை ஸ்ரீராகவேந்திரர் கோவில்
Page 1 of 1

ஸ்தல வரலாறு
சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் திம்மண்ணபட்டர்-கோபிகாம்பாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த ராகவேந்திரர், திருப்பதி வெங்கடாஜலபதி அருளால் பிறந்ததால் வேங்கடநாதர் என அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே அவரின் தந்தை மறைந்துவிட்டார்.
ராகவேந்திரருக்கு 1614ம் ஆண்டு சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு பிறகு மேலும் கல்வியில் சிறந்து விளங்கிட கும்பகோணம் சென்றார் ராகவேந்திரர். வேதாந்தம், இலக்கணம் போன்றவற்றை ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்ற மகானிடம் கற்றார். இல்லற வாழ்வில் ஒரு ஆண்குழந்தைக்கு தந்தையும் ஆனார் ராகவேந்திரர்.
தஞ்சையில் உள்ள மத்வபீடத்திற்க்கு அடுத்த வாரிசை தேடிக்கொண்டிருந்த சுதீந்திரருக்கு இதற்கான முழுத்தகுதி ராகவேந்திரருக்கே உள்ளதாக கருதினார். அவரிடம் மத்வபீடத்தின் வாரிசாக பொறுப்பேற்க வேண்டினார். வறுமையில் வாடிய ராகவேந்திரர், தான் மீண்டும் புவனகிரிக்கே சென்று குழந்தை, மனைவியை காப்பாற்றும் பொறுப்பு இருப்பதால் பொறுப்பு ஏற்காமல் புவனகிரிக்கே சென்றார்.
அவர் புவனகிரி சென்றிருந்த வேளையில் குரு நாதர் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்ற, மனம் கேட்காமல் தஞ்சை திரும்பினார். 1621ல் பங்குனி மாதம் சுக்ல த்விதியை கூடிய நன்னாளில் தஞ்சை மன்னரும் மந்திரிகளும் எல்லா மக்களும் கூடியிருக்க தஞ்சாவூரில் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றங்கரையில் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என நாமம் கொண்டு துறவறம் பூண்டார்.
தன் கணவர் துறவறம் பூணுவதற்குள் அவரை பார்த்துவிட வேண்டும் என ஓடிவந்த அவரது மனைவி, துறவறம் பூணுவதைப் பார்க்க முடியாததாலும் தன் கணவர் துறவறம் பூண்டுவிட்டதாலும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இருப்பினும் அவரின் ஆன்மா ராகவேந்திரரை நோக்கி அவரின் மடத்திற்கு சென்றது. மனைவியின் ஆன்மா தன்னை தேடி தவிப்பதை உணர்ந்த ஸ்ரீராகவேந்திரர் கமண்டல நீரை தெளித்து பிறப்பு இறப்பற்ற மோட்ச நிலைக்கு அனுப்பினார்.
ஸ்ரீ மத்வபீடாதிபதியாக 12 ஆண்டுகள் பொறுப்பேற்று அம்மடத்தில் இருந்தார். பின்பு ஆந்திர பகுதிகளுக்கு சென்று பல அற்புதங்களை நிகழ்த்திய ராகவேந்திரர், மந்த்ராலயத்தில் 1671ம் வருடம் ஆவணி மாதம் ஜீவசமாதி அடைந்தார்.
சுவாமி ஜீவசமாதி அடைந்த நேரத்தில், அவர் தங்கியிருந்த துறவறம் பூண்ட தஞ்சை மண்ணில் கோவில் அமைக்க முற்பட்ட மக்கள், சுவாமி தவம் இருந்த இடம் தெரியாமல் தேடினர். அப்போது நாகம் ஒன்று சுவாமி தவம் இருந்த இடத்தை வட்டமிட்டு காட்டியது. அந்த இடத்தில் கோவில் எழுப்பி இப்போது வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு அதிக மக்கள் கூட்டம் வரும். மூன்று வாரம், ஏழு வாரம், ஒன்பது வாரம் என வழிபாடு மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
செல்லும் வழி: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ஆட்டோக்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்லமுடியும். வடவாற்றங்கரை என்ற இடத்தில் உள்ளது இக்கோவில்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum