Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனவில் வந்து உணர்த்தும் காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில்

Go down

கனவில் வந்து உணர்த்தும் காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் Empty கனவில் வந்து உணர்த்தும் காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:26 pm

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்தப்பகுதி மக்களின் குலதெய்வமாக இந்த சிவன்மலை முருகன் போற்றப்படுகிறார். இந்த முருகனின் சிறப்பு என்னவென்றால் தன்னை வணங்கும் பக்தர் யாராவது ஒருவரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை சூட்சுமமாக சொல்லிவிட்டு மறைந்துவிடுவார்.

அவர் சொன்ன பொருளை கோவிலின் அலுவலகத்தில் சென்று சொல்லவேண்டும். அவர்கள் சுவாமியிடம் உத்தரவு கேட்டு பூக்கட்டி போட்டு பார்ப்பார்கள். சொன்னவருக்கு சாதகமாக உத்தரவு வந்தால் அவர் சொன்ன பொருளை அங்குள்ள உத்தரவு பெட்டி என்னும் கண்ணாடி பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடக்கும்.

உதாரணமாக சுனாமி வந்தபோது தண்ணீரை வைத்து பூஜை நடந்தது, மஞ்சள் விலை ஏறிய சமயத்தில் மஞ்சளை வைத்து பூஜை நடந்தது. இப்போது பாலை வைத்து பூஜை நடக்கிறது. இப்படியாக வைத்து பூஜை செய்வதால் குறிப்பிட்ட பொருட்கள் அழிந்து போவது, பொருட்கள் விலையேறுவது, சில விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் போன்றவற்றை முன்பே உணர்த்தி உலக மக்களை பெருமளவு துயரங்களில் இருந்து காக்கிறார் என்பது நம்பிக்கை. அடுத்த பொருள் பக்தரின் கனவில் வந்து உணர்த்தும் வரை முன்பு இருந்த பொருளே தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்தல வரலாறு :

தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது.

கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களாலும் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும் பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரமாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும்போது வில்லாக இருந்த மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.

அகத்திய முனிவரால் இந்த பகுதிக்கு வந்த முருகன் :

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.

நோய்க்கு மருந்து முருகனே என்றார் கௌதம மகரிஷி :

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

1717-ம் ஆண்டு முதல் முருகனின் மகிமையை அறிந்தார்கள் :

சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.

1717-ம் ஆண்டு சர்க்கரை மன்றாடியார் வம்சத்தை சேர்ந்த ஒருவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் அடைந்தார். அந்த இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்தால் சிவன்மலையில் தேர் வருவதற்கு பாதை அமைத்து தருவதாக வேண்டினார்.

பக்தர்களை காண விரும்பிய முருகன் அந்த பக்தனின் நியாயமான பிராத்தனைக்கு செவி சாய்த்தார். அவர் கஷ்டங்கள் தீர்ந்தது. வேண்டிய படி முருகனின் தேர் வீதி உலா வர சிவன்மலையில் பாதை அமைத்தார் அந்த பக்தர்.

வெண்குஷ்டத்தை போக்கிய முருகன் :

வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். இதற்கு நிறைய வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை என்பதால் வள்ளியாத்தாள், சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்தாள்.

இதன் பலனாக சில மாதங்களிலேயே தெரிந்தது. ஆம்… விசுவநாதனின் வெண்குஷ்டம் நோய் நீங்கியது. இதனால் மகிழ்ந்து, பாடல்கள் மூலமாக சிவன்மலை முருகனை போற்றினாள் வள்ளியாத்தாள். சிவன்மலை குமரப்பெருமானை வணங்கினால் தீராத வியாதிகளை தீர்ப்பான் முருகன்.

செல்லும்வழி:

சென்னையில் இருந்தோ மற்ற எந்த ஊர்களில் இருந்தோ செல்பவர்கள், திருப்பூருக்கோ அல்லது ஈரோடுக்கோ சென்று அங்கிருந்து பஸ்ஸில் காங்கேயம் செல்லலாம். காங்கேயம் நகரத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் திருப்பூர் செல்லு
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum